கல்வி! வாங்க கேப்டன் சார்

நாட்டின் வளர்ச்சி 10 சதவீதமாக, கடல் சார்ந்த துறைகளின் வளர்ச்சி 30 சதவீதமாக அமைய வேண்டும். கடல் பலம் இருந்தால் தான், உலகத்தை வெல்ல முடியும் என்பதை அறிந்து பல நாடுகளும், தங்களை கப்பல் துறையில் மேம்படுத்தி வருகின்றன.

கப்பல் பணியில், இன்று பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. அதிலும் இந்தியர்களை பணியில் அமர்த்த பல நாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. பல நாடுகளில் உள்ள கப்பல் நிறுவனங்களில் அதிகம் பேர் இந்தியர்களே உள்ளனர்.இந்தியர்கள் இதில் சிறந்து விளங்குவதால் மற்ற நாடுகள் நம்மை விரும்புகின்றன.

கப்பல் பணியில் கப்பல் செலுத்துபவர், பொறியாளர், மாலுமிகள், மற்ற பணிகளைச் செய்பவர்கள் என வேலை இடங்கள் உள்ளன.இந்த பணியில் சேர்ந்தால் சமூகத்தில் நம் அந்தஸ்து உயரும். தனித்திறன், கடும் உழைப்பு அதிகரிக்கும். அதிக சம்பளம் கிடைக்கும். ஏழெட்டு ஆண்டுகள் மாலுமிகளாக பணி புரிந்தால், கப்பல் கேப்டனாகலாம். கப்பலில் பணிபுரிந்து வந்த பின்னும் இத்துறையில் பல்வேறு உயர் பதவிகள் தேடி வரும்.கப்பல் துறையில் எந்த பணியில் சேர வேண்டுமானாலும் உடற் தகுதி அவசியம். பிளஸ் 2வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கப்பல் பணியில் வாங்கும் ஊதியத்தில் பெரும்பகுதிக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை

.தற்போது உலக அளவில் கப்பல்களின் தேவையும், பெரிய கப்பல்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதைப் பற்றியும் மாணவர்கள் யோசிக்கலாமே?

No comments:

Post a Comment