பாருங்கள்,பார்க்கத் தூண்டுங்கள்.

மும்பையில் அல்லாஹ்வின் அருளால்,பீஸ் கான்பரன்ஸ் தொடங்கி நடந்துவருகிறது,அந்த நிகழ்ச்சிகள் யாவும் பீஸ் டிவி மூலம் நேரடி ஒளி பரப்பாகவும் காண்பிக்கப்படுகிறது.சுமார் 30 நாடுகளிலிருந்து அழைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.மேற்கொண்டு விபரம் அறிய
http://peaceconference.in/index.htm இந்த தளம் சென்று விபரங்கள் அறியலாம்.மேலும் டாகடர் ஜாகிர் நாயக் அவர்களின் இணைய தளமான http://irf.net/ சென்றும் அறிந்துகொள்ளலாம்.நீங்கள் பார்ப்பதோடு,உங்கள் மாற்று மத நண்பர்களையும் பார்க்கத்தூண்டுங்கள்.

சுவர்க்கவாசிகள் VS நரகவாசிகள்

சுவர்க்கவாசிகள் VS நரகவாசிகள்




உணவு


இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்) (56:20,21)

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது அன்றியும் பசியையும் தணிக்காது. (88:6,7)
-----------------------------------------------------------------

பானம்

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள் அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும் (76:5)

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும். அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு. (14:16,17)
------------------------------------------------------------

ஆடை


அவர்களின் மீது ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும். இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர். அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர். ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். (22:19)
-------------------------------------------------------------
தோற்றம்

அந்நாளில் சிலமுகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80:38,39)

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும். (80:40)
--------------------------------------------------
படுக்கை

(பொன்னிழைகளால்) செய்யப்பட்ட கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். (56:15,16)

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (7:41)
----------------------------------------------------------
வரவேற்பு

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள். அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள் எனவே அதில் பிரவேசியுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்). (39:73)

"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள் என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும் பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது. (39:72)
-------------------------------------------------------------
தங்குமிடம்

அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான் சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் அன்றியும், நிலையான அத்னு என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு இதுவே மகத்தான பாக்கியமாகும். (61:12)

அது சுட்டெரிக்கும் நெருப்பாகும் (101:11)

அவர்கள் நரகில் கருகுவார்கள் (83:16)
---------------------------------------------------------------
முன்னேற்பாடு

அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17)

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
--------------------------------------------------------------
நிரந்தரம்

அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள். (18:108)

நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள். (98:6)

அல்லாஹ்வை தொழுவோம் வாருங்கள்!!!





அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)



அல்லாஹ்வை அடிபணிய-
நேரம் வந்துவிடின்
ஆழ்கடலென்ன,
மலையுச்சிஎன்ன,
அண்டவெளிதான் என்ன,
ஒரு நல்ல அடியானுக்கு!!!

அரசனும், பக்கிரியும் ஒன்றாக....

"முஸ்லிம்" தோழர்கள் நம்மைப் போல், தங்களுக்குள்ளேயே மிகுந்த ஜாதிவேற்றுமை பாராட்டிக் கொள்வதில்லை. நாம் நம்மைச் சேர்ந்த இந்துக்களிலேயே பலரை தெருவில் நடக்க விடாமலும், கோயில்களுக்குள் நுழைய விடாமலும், குளம், கிணறுகளில் தண்ணீர் முகக்க விடாமலும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயில விடாமலும் தடுப்பது போல, அவர்கள் எந்த "முஸ்லிம்" சகோதரரையும் தடுப்பதில்லை. "முஸ்லிம்" என்று சொல்லக்கூடியவர்கள் எவராயிருப்பினும் அவர்களுடன் உடன் பிறந்தார் போல நடந்து கொள்ளுகின்றனர். அவர்களுடைய "மசூதி"களில் சிறிதும் வேறுபாடு இல்லாமல் அரசனும், பக்கிரியும் ஒன்றாக மண்டியிட்டு வணங்குகின்றனர்.

அன்றியும், அவர்களுடைய பெண்களுக்கும், ஆண்மக்களைப் போலவே எல்லா உரிமைகளையும் தாராளமாக அம்மதம் வழங்கியிருக்கின்றது. விதவா விவாகம் புரிந்து கொள்ளலாம்; விவாக விடுதலை செய்து கொள்ளலாம்; ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் சொத்துரிமை உண்டு.

குடிப்பழக்கம் என்பது எள்ளளவும் அவர்களிடம் இல்லை. அதை மதம் மிகவம் வன்மையாகக் கண்டித்து ஒதுக்குகின்றது. அன்றியும், நம்மைப் போன்று "விக்கிரக ஆராதனம்" செய்யாத காரணத்தால் குடிப்பழக்கம் ஏற்படுவதற்கே இடமில்லாமலும் ஒழித்து விட்டது என்றே கூறலாம்.

மேற்கூறிய சிறந்த கொள்கைகள் இன்றும் "இஸ்லாம் மார்க்க"த்தில் நிலை பெற்று இருக்கும் காரணத்தால், அதைப் பின்பற்றும் மக்கள் வரவர வளர்ச்சியடைந்தும், செல்வத்திற் சிறந்தும் உயர்ச்சியடைந்து வருகின்றனர்.
..........................................

"இந்து மதத்தில் கை வைக்கக்கூடாது" என்று கூறும் "பக்தர்"களைச் சில கேள்விகள் கேட்கிறோம். அவற்றிற்கு விடையளித்து விட்டுப் பிறகு நாம் கூறுவது தவறு என்று காட்டினால் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ளுகிறோம்.

எத்தனை காலமாக நாம் இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றோம்? இந்து மதத்திற்காக இதுவரையிலும் எத்தனை கோடி ருபாய்கள் செலவு செய்திருக்கிறோம்? இப்பொழுதும் ஒவ்வோராண்டும் எவ்வளவு ருபாய் செலவு செய்து கொண்டு வருகின்றோம். இருபத்து மூன்று கோடி இந்துக்களுக்கு முப்பத்து மூன்று கோடி தேவர்கள் தெய்வமாக இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் ஏன் இந்துக்களின் கஷ்டங்களை நீக்க முன்வரக்கூடாது?

இந்தியாவில் மிகப் பெரும்பாலான மக்களாயிருக்கும் இந்துக்கள் ஒற்றுமையாயிருந்தால், வேற்று நாட்டினர் இப்பொழுது இந்தியாவைப் பிடித்து அரசாள முடியுமா? இவ்வித ஒற்றுமை இந்துக்களுக்குள் ஏற்படாமல் போனதற்குக் காரணம் இந்துமதத்தில் உள்ள சாதி வேற்றுமையல்லவா? இந்துக்கள் நாளுக்கு நாள் வறுமையில் மூழ்குவதற்குக் காரணம் அவர்கள் வருந்தி ஈட்டும் செல்வத்தைப் பண்டிகைகள் கொண்டாடுவதும், கோயில்களுக்குச் செலவிடுவதும், நன்மை தீமைக்கான பல சடங்குகளில் செலவழிப்பதும் அல்லவா?

அன்றியும், இந்துமதம் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா? இந்து மதத்திற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால் வேதம் என்று சொல்லுவீர்களானாலும், அந்த வேதத்தை நீங்கள் படித்திருக்கிறீர்களா? பிராமணரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வேதத்தைப் படிக்கவாவது உரிமையுண்டா? முஸ்லிம் மத வேதமாகிய "குரானை" இன்னார் தான் படிக்கலாம்; இன்னார் படிக்கக் கூடாது என்று அம் மதத்தில் இருக்கிறதா? எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய வேதத்தைப் படிக்க உரிமையிருக்கிறதே! அதுபோல, இந்து மதத்தில் ஏன் இல்லை?


ஆனால், இந்துமதத்தில் ஏன் பார்ப்பனர்கள் மாத்திரம் வேதங்களைப் படிக்கலாம்; மற்றவர்கள் படிக்கவும் கூடாது; படிப்பதைக் கேட்கவும் கூடாது; படித்தால் நாவையறுக்க வேண்டும்; படித்ததைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ஏன் கட்டளையிடப்பட்டிருக்கிறது? இதனால் இந்து மதம் என்பது பார்ப்பன மதம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏற்பட்ட மதம் என்பது தெரியவில்லையா? என்று தான் கேட்கிறோம். இக்கேள்விகள் நியாயமான கேள்விகளா? அல்லவா? என்று ஆராயுங்கள்!

தந்தை பெரியார் . "குடிஅரசு" – 04-09-1932.

600 சீனர்கள் முஸ்லிம்களாக மாறினர்

ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றிய 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில், முஸ்லிம்களாக மாறினர். சவுதியின், மெக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது. இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள், மெக்காவில் நடந்த விழா ஒன்றில் முஸ்லிம்களாக மதம் மாறினர்.

இது குறித்து மெக்காவைச் சேர்ந்த அதிகாரி அப்துல் அசிஸ் அல்குதைரி கூறுகையில், "சீனர்கள் பணியாற்றிய பகுதியில், அவர்கள் மொழியில், இஸ்லாமிய புத்தகம் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த மதமாற்றம் நிகழ்ந்துள்ளது' என்றார்.ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றும், 5,000 சீன பணியாளர்கள் இடையே, இஸ்லாம் தொடர்பான தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்பட்டது.

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

குர்ஆனும் விஞ்ஞானமும்! சமுத்திர ஆழங்களில்....


"அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை". 24:40 THE QURAN

கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது. காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. "ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்" என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும்.

ஓர் ஒளிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம், சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது. காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை.

அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சல் நிறம் 50 முதல் 100 வரையும், பச்சை நிறம் 100 முதல் 200 வரையும், நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும், கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது.

கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே! கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது;

ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை....

வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.

இறை வசனம் மேலும் கூறுகின்றது;

அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.

விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன.

பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார்.

"1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்."

Dr. Zakir Naik. தமிழாக்கம்: இப்னு ஹுஸைன்