அதிரையில் அநியாயம் ! சுட சுட கேன்சர் விநியோகம் !! அரசு தடுக்குமா?

விருந்துக்கு வராத உறவினர்களுக்கு உணவு அனுப்ப பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி உணவுகளை சுடச்சுட அனுப்பும்போது அவர்களுடைய  வயிற்றுக்கு கேன்சரையும் சேர்த்து நாம் அனுப்புகிறோம் என்பதை எப்போது நாம் அறியப் போகிறோம்?
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க நினைப்பவர்கள் அந்தப் பைகளின் உற்பத்தி நிலையங்களின் லைசென்சுகளை இரத்து செய்யாமல் விட்டு வைத்து இருப்பது ஏன் ? விஷம் வரும் வழியை அடைக்காமல் விஷ முறிவு ஊசி போடுவதால் பயன் உண்டா ?

சுத்தமும் சுகாதாரமும் அவரவர் வீடுகளில் பிறந்து வளர வேண்டிய செல்லக் குழந்தைகள். அவற்றை  அரசு மட்டும் வளர்த்துவிட இயலாது. பெற்ற பிள்ளைகளை  பேணி வளர்ப்பது போல் நாமும் சுயமாக முயற்சி செய்து வளர்க்க வேண்டும். ஹெல்த் இஸ் வெல்த் என்று சொல்வார்கள். “தூய்மை இறை வணக்கத்தில் பாதி   “ என்பது பெருமானார் ( ஸல்) அவர்கள் நவின்ற நபி மொழி . ‘சுத்தம் சோறு போடும்’ என்று ஆரம்பப் பள்ளிகளிலேயே படித்து இருக்கிறோம்.   ஆகவே ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மற்றும் தூய இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். இதை அரசுதான் செய்யவேண்டுமென்று தனிமனிதன் எதிர்பார்ப்பது,  தனிமனிதனின் தன்மையை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் செயலாகும்.

கண்ட இடங்களில் ஒன்று மட்டும் இரண்டாம் இயற்கைக் கடமைகளை நிறைவேற்றுவது, வீட்டு ஜன்னலிலிருந்து எச்சில் துப்புவது, பஸ்களில் பயணிக்கும்போது பட்டாணிக்கடலை மற்றும் நிலக்கடலைகளைக் கொறித்துவிட்டு அவற்றின் தோல்களைக் காற்றில் பறக்கவிட்டு சக பயணிகளின் முகத்தில் விழவைப்பது, மூக்கை சிந்தி சுவர்களில் தேய்ப்பது , உணவுவிடுதிகளில் வாய் கொப்பளிக்கிறேன் என்று பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றாக வெளியே வந்து விழும் அளவுக்கு காரிக் காரித்துப்புவது ஆகிய பழக்கங்களை, ‘ பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு’  என்று பாடிக் கொண்டே செய்யலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

TO READ FULL ARTICLE

http://www.adirainews.net/2014/10/blog-post_722.html?showComment=1413608702224#c3677176025617438119

No comments:

Post a Comment