நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். திருக்குர்ஆன் 4:48
Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள்
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இந்த பதிவில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகள், முஸ்லிமல்லாத சகோதரி/சகோதரிகள் தங்களுக்குள்ளாக கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருக்கலாம்.
இந்த பதிவை படிக்கும் முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இந்த பதிவை நீங்கள் எந்தவொரு முன் முடிவுமின்றி படியுங்கள். பின்னர் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து குறித்து ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். இறைவன் உங்களுக்கு இந்த பயணத்தை எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.
பதிவிற்குள் செல்வோம்,
1. தங்கள் சொத்துபத்துகளை பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவற்றை அப்படியே விட்டு விட்டு நாயகம் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்து சென்றனர் முஸ்லிம்கள்....இது அன்று நடந்த சம்பவம்.
"ஒன்று நீங்கள் இஸ்லாமை துறக்க வேண்டும், அல்லது உங்கள் குழந்தைகளை துறக்க வேண்டும்" என்ற இக்கட்டான கேள்வி ஆமினாஹ் அசில்மி அவர்களது விவாகரத்து வழக்கில் முன்வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு, கனத்த உள்ளத்தோடும் கலங்கிய கண்களோடும் சகோதரி ஆமினாஹ் அசில்மி சொன்ன பதில் "என்னால் இஸ்லாத்தை துறக்க முடியாது"......இது இன்று நடந்த சம்பவம்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே இவர்களைப்போன்ற பலர் வந்து சென்றிருக்கலாம்.
- ஒரு மார்க்கத்திற்காக, எதனையும் தியாகம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது?
- ஒரு மார்க்கம் இவர்களை இப்படி கட்டி போட்டிருக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்?
2. சில வருடங்களுக்கு முன்பு (2007), பிரிட்டனில், முஸ்லிம் இளைஞர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பிரிட்டனில், இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு வாழ விரும்புவதாக பெருவாரியான இளைஞர்கள் (40%) கருத்து தெரிவித்திருந்தனர். இது, அந்த கருத்துக்கணிப்பை நடந்தியவர்களை அதிர்ச்சியுற செய்தது.
பொதுவாக, இளைஞர்கள் என்பவர்கள் ஜாலியாக இருக்க விரும்புபவர்கள் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கின்றது. அப்படியிருக்க, முஸ்லிம் இளைஞர்கள், கடுமையான சட்டதிட்டங்கள் என்று விமர்சிக்கப்படுகின்ற ஷரியத் சட்டத்திற்கு கீழ் வாழ விருப்பப்படுவது எதனால்?
3. 30-40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், உலகளவில், ஹிஜாப் என்னும் ஆடை முறையை அணியும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேயே இருந்ததாக அறிகின்றோம்.
ஆனால் இன்றோ, அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகின்றனர்.
விஞ்ஞானம் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ள இந்நாளில், முஸ்லிம் பெண்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் இந்நாளில், இயல்பாகவே, ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமென்பது ஹிஜாபை விமர்சிப்பவர்களின் பார்வையாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தலைக்கீழாக அல்லவா இருக்கின்றது?
விஞ்ஞானம் அற்புத வளர்ச்சியை பெற்றுள்ள இந்நாளில் தான் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் விரும்பி ஹிஜாப் அணிகின்றனர். இது எதனால்?
4. மது அருந்த இஸ்லாம் தடை விதித்த போது, தாமதிக்காமல் தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்து நொறுக்கினர் முஸ்லிம்கள். அதுபோல, பெண்களின் ஹிஜாப் குறித்த கட்டளை வந்த போது, உடனடியாக, தங்களிடமிருந்த ஆடைகளை சிறு துணிகளாக கிழித்து, ஹிஜாபை பேணிக்கொண்டனர் பெண்கள்.
இன்றளவும் கூட, இஸ்லாமை சரிவர பின்பற்றும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கருத்தில் உறுதிப்பாடாக இருந்து, அதற்கு எதிரான கருத்தை குரானிலிருந்து எடுத்து காட்டினால் சட்டென்று தன் நிலையை மாற்றி கொள்வார்.
ஒருவருடைய பழக்கவழக்கங்களை திடீரென மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் எத்தனையோ சகோதரர்களை பார்த்திருப்போம், மது அருந்த மாட்டேனென்று, புகை பிடிக்கமாட்டேனென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த சிரமப்படுவார்கள்.
ஆனால், இஸ்லாம் கூறிய ஒரு கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் வீட்டிலிருந்த மதுக்குடுவைகளை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் என்றால், தங்களுடைய நீண்ட நாள் பழக்கத்தை ஒழித்துவிட நாடுகின்றார்கள் என்றால், அப்படி என்ன இருக்கின்றது இந்த மார்க்கத்தில்?
ஒரு கட்டளை, ஒரு மனிதருக்குள் இந்த அளவு பாதிப்பை, மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்றால் இதற்கு என்ன காரணம்?
5. நம் பதிவுலகில், இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற தளங்கள் உண்டு (இந்த தளங்களை நடத்துபவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் இளைஞர்கள் [17-18 வயது டீனேஜர்கள் கூட உண்டு]). இஸ்லாத்திற்காக இத்தனை உள்ளங்களா என்று நான் வியந்ததுண்டு.
அழைப்பு தளங்கள் மட்டுமல்லாது, பொதுவான விஷயங்கள் குறித்து எழுதும் பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களும் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டே எழுதுகின்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தங்கள் தளங்களில் பார்வைக்கு வைத்தே இருக்கின்றனர். இவை மட்டுமல்லாமல், அவ்வப்போது இஸ்லாம் குறித்த கட்டுரைகளையும் பதிவு செய்தே வருகின்றனர்.
ஆக, பதிவுலகை பொருத்தவரை, பெரும்பாலான முஸ்லிம் பதிவர்கள் மார்க்கத்திற்கு உட்பட்டே செயலாற்றுகின்றனர்.
ஒரு விஷயம் குறித்து எழுதும் போது, இது இஸ்லாமிற்கு உட்பட்டு தான் இருக்கின்றதா என்று ஆராய்ந்து செயல்படுமளவு எப்படி ஒரு மார்க்கம் ஒருவருடைய அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றது?
6. பெண்களை தவறாக நடத்தும் மார்க்கம் இஸ்லாம் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இஸ்லாமை நன்கு ஆராய்ந்து, அதனை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்போரில் பெரும்பாலானவர்கள் பெண்களே. இது ஏன்?
7. சென்ற ஆண்டு, கவனிக்கப்படதக்க ஆய்வொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அமெரிக்க சராசரியை பொருத்தவரை, ஆண்களை விட பெண்களே இறைபக்தியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்களை பொருத்தவரை, ஆண்கள் பெண்கள் என்று வித்தியாசமில்லாமல் இருபாலரும் இறைபக்தியில் சமமாகவே சிறந்து விளங்குகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், "உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?" என்ற கேள்விக்கு, எண்பது சதவித (80%) முஸ்லிம் அமெரிக்கர்கள் "ஆம்" என்று பதில் அளித்திருக்கின்றனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.
தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் கூறியிருந்தாலும், இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர். (2007ஆம் ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், வேறெதையும் விட இஸ்லாம் தங்கள் வாழ்வில் அதிமுக்கியமானது என்று 86% பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தெரிவித்திருந்தனர்).
- எப்படி ஒரு மார்க்கம், ஆண் பெண் வித்தியாசமில்லாமல், ஒருவருடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கின்றது?
- இஸ்லாமை தவிர்த்து விட்டு, முஸ்லிம்களின் வாழ்க்கையை பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க என்ன காரணம்?
8. நிச்சயமாக முஸ்லிம்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவை மார்க்கத்தை சரியான வழியில் பின்பற்றுவது குறித்த கருத்து வேற்றுமைகள். ஆனால், இஸ்லாத்திற்கெதிராக ஒரு நிகழ்வு நடந்தால் அதை ஒன்று சேர்ந்து சந்திக்கும் இவர்களது செயலாற்றல் அளப்பரியது.
- எதற்காக ஒரு மார்க்கத்தின் மீது இந்த அளவு பற்று வைத்திருக்கின்றனர்?
- ஒரு மார்க்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்திக்கின்றதென்றால் அதற்கு என்ன காரணம்?
9. மேலே பார்த்ததையெல்லாம் விட முக்கியமாக, இப்போது பார்க்கப்போகும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது.
உலகில், ஒரு மார்க்கத்தின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதென்றால் அது இஸ்லாம் மீதாகத் இருக்க முடியும். உதாரணத்திற்கு, 1800-1950க்கு இடையேயான காலக்கட்டத்தில், சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்கெதிராக எழுதப்பட்டிருந்ததாக டைம்ஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- வரலாறு முழுக்க இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்திருக்கும் நிலையில், இவை, இஸ்லாத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையே...ஏன்?
- வழக்கம் போல இஸ்லாம் தொடர்ந்து மக்களை கவர்ந்திழுத்து வருகின்றனதே...எப்படி?
மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் நமக்குள்ளாக பிரதிபலித்து கொள்ளப்படவேண்டியவை.
முஸ்லிம்கள் இப்படி கட்டுண்டு இருப்பதற்கு "நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றீர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் பதிலாகாது.
அதுபோலவே, விஞ்ஞான முன்னேற்றங்களால் இஸ்லாத்தின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணுவதும் அறியாமையின் உச்சமாகவே அமையும்.
முஸ்லிமல்லாத சகோதர/சகோதரரிகள் இந்த பதிவின் மையப்பொருள் குறித்து நன்கு சிந்தியுங்கள். "சரி, இவர்களை ஆட்டி வைக்கும் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று படித்து தான் பார்ப்போமே" என்ற முடிவிற்கு நீங்கள் வந்தால், குர்ஆனை கேட்டு எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை உங்களுக்கு (soft copy) அனுப்பி வைக்கின்றேன்.
படிப்பவர் புருவத்தை உயர வைக்கும் ஒரு குர்ஆன் வசனத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு அருளியுள்ள(வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).
என்னவொரு அதிகாரத்தோரணை?
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
References:
1. ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி. link.
2. UK Muslim community statistics. link.
3. முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு. link.
4. Between 1800-1950, 60,000 books written against Islam: The Times, dated 16th April 1979.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)
மழையும் மாமறையும்
நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம்.
பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன.
பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது.
இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன.
இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன.
விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது.
தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம்.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்!
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, “அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது” என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம்.
மின்னல்
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது.
அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன.
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.
கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்!
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும்.
விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான்.
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான்.
மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம்.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி (ஸல்) அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்!
எரிமலையும் இறைமறையும்
வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன.
இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும்.
மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11)
என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும் (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.
அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன! நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!
source: tntj.net
மறைவான வணக்கம்
இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.
Labels:
அண்ணல் நபி (ஸல்..),
அண்ணல் நபிகள்,
இஸ்லாம்,
முஸ்லீம்
அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!
நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
நன்மை – தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
தலையில் பிறந்தோன் – காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
அன்புள்ள சகோதரர்களே !
நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள்.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.
ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அதிரை ஏ.எம்.பாரூக்
Labels:
அருட்கொடை,
ஆயிஷா(ரலி),
இறைத்தூதர்(ஸல்),
இஸ்லாம்,
நன்மை
அண்ணல் நபிகளின் அமுத மொழிகள்! அண்டை வீட்டார்
முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி
அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்
எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.
Subscribe to:
Posts (Atom)

