நாடு முழுவதும் கடந்த மாதம் தக்காளி விலை கிலோ ரூ.60 வரை விற்றது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டதாக அரசுகள் மீது எதிர்க் கட்சிகளும் பாய்ந்தன. இப்போது, தக்காளி விலை ரூ15க்கு வீழ்ச்சி அடைந்து விட்டது. மக்களும் நிம்மதியாக உள்ளனர். ஆனால், குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் நகரில் மட்டும் தக்காளி விலை இப்போதும் கிலோ ரூ250க்கு விற்கப்படுகிறது. மக்களும் அதை போட்டிப் போட்டு வாங்கி சாப்பிடுகின்றனர். தக்காளி விற்பவர்கள் செழுமையாக இருக் கின்றனர்.
கிலோ ரூ250க்கு விற்கும் அளவுக்கு அந்த தக்காளியில் அப்படி என்ன இருக்கிறது? வேறு ஒன்றுமில்லை; போதை இருக்கிறது. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள் ளச் சாராயத்துக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அவர்களின் கண்ணில் மண்ணை தூவ கள்ளச்சாராய கும்பல் கண்டு பிடித்துள்ள நூதன வழி தான் ‘போதை தக்காளி’. நல்ல பழுத்த அழகிய தக்காளியை கூடை கூடையாக வாங்கிக் கொள்ளும் சாராய வியாபாரிகள், அவற்றை நன்றாக கழுவுகின்றனர். பின்னர், அவற்றை நன்றாக உருட்டி, பழத்தை மெதுவாக்கி விடுகின்றனர். பின்னர், ஊசியை செலுத்தி தக்காளிக்குள் இருக்கும் ரசத்தை ஊறிஞ்சி எடுத்து விட்டு, அதற்கு பதிலாக போதைப் பொருளை செலுத்துகின்றனர். அதை அப்படியே எடுத்து பிரிட்ஜில் வைத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு சாலட் போல் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு தட்டில் வைத்து கொடுக்கின்றனர். இல்லை என்றால், அப்படியே சாப்பிட கொடுக்கின்றனர். அதை சாப்பிடும் வாடிக்கையாளர்கள் போதையில் மிதக்கின்றனர். அதனால்தான், இந்த தக்காளியின் விலை மட்டும் கிலோ ரூ250.
No comments:
Post a Comment