விதியை மீறுகிறார்களா .........


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்பள்ளிகல்லூரி வாகனங்கள்ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனபோக்குவரத்துத் துறைமாவட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிஅமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகல்லூரி வாகனங்கள் மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கப்பட்டு இருக்க வேண்டும். முன்னும்பின்னும் பள்ளிகல்லூரி வாகனங்கள் என எழுதப்பட்டு இருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் மருந்துகள் கண்டிப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயணைப்பான் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் கதவுகள் சரியாக பூட்டப்படும் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.
டிரைவர்பத்து ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வாகனங்களில் குறிப்பிட்டுள்ள இருக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. அதே போன்றுஆட்டோக்களில்பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் மட்டுமே ஏற்றிச் செல்லும் போதுமிகவும் பாதுகாப்பாகவும்அவர்கள் உடமைகளை வாகனத்துக்கு வெளியே தொங்க விட்டுபாதுகாப்பற்ற முறையில்ஆட்டோக்கள் இயக்கப்படக் கூடாது. இதே போன்று பெற்றோர்பள்ளி நிர்வாகங்களும்மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களில்ஐந்து பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளிகல்லூரி வாகனங்களில்பாதுகாப்பு, "கிரில்" பொருத்த வேண்டும். ஆசிரியர் நிலையில் ஒருவரைபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்பணியில் அமர்த்த வேண்டும்.
பள்ளிகல்லூரி மாணவமாணவியரை ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களில்டிரைவர்,உதவியாளர் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவேட்டைபள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் உதவியாளர்மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இத்தகையை நடைமுறைகளை அமல்படுத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்பள்ளிகல்லூரி வாகனங்கள்ஐகோர்ட் உத்தரவில் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்த வேண்டும். மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைஅனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment