இளம் பெண்ணின் கண்பார்வை மீள்வதற்கு உதவுங்கள்!


இலங்கை, ஓட்டமாவடியைச் சேர்ந்த் 18 வயதான யுவதி ஒருவரையே (கீழே உள்ள) படத்தில் காண்கிறீர்கள். (முன்னைய தோற்றமும் தற்போதைய தோற்றமும்)

இவருக்கு ஏற்பட்ட சிறிய நோய் ஒன்றுக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இவர் தற்போது Steven Johnson Syndrome எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அழகிய தோற்றத்தைக் கொண்ட இந்த யுவதியின் முகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது இரு கண்களினது பார்வையும் பறிபோயுள்ளது.

இந் நோய் மிகவும் அரிதானது எனவும் ஒரு இலட்சம் அல்லது பத்தாயிரம் பேரில் ஒருவருக்கே இந்த பாதிப்பு ஏற்படும் எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நோய் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கொழும்பு கண் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் இவ் யுவதிக்கு மீண்டும் ஒரு கண்ணினதேனும் பார்வையைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என இவரைப் பரிசோதித்த இந்தியாவைச் சேர்ந்த விசேட கண் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அடுத்த வாரமளவில் இவருக்கு சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தமாக 4 இலட்சம் ரூபா இச் சத்திர சிகிச்சைக்காக தேவைப்படுகின்ற நிலையில், இவரது குடும்பத்தினர் 80 ஆயிரம் ரூபாவை மாத்திரமே தமது கைவசம் வைத்துள்ளனர்.

மிகவும் வறியவர்களான இவரது குடும்பத்தவர்களால் இத் தொகையைத் திரட்டுவது முடியாத காரியமாகவுள்ளது.

ஏற்கனவே இவரது கண்ணின் ஈரலிப்புத் தன்மையைப் பேணுவதற்காக Thera Tears எனும் மருந்தினை கொள்வனவு செய்வதற்காக தினமும் 1050 ரூபாவினை செலவழிக்க வேண்டியுள்ள நிலையில் இப் பாரிய தொகையினைத் திரட்டுவதில் இவரது குடும்பத்தினர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே நல்லுள்ளம் படைத்த சகோதர சகோதரிகள் மிகச் சிறிய தொகையேனும் கொடுத்துதவினால் இவரது சத்திர சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள முடியும் என்பதுடன் இவ் யுவதிக்கு ஒரு கண் பார்வையையாவது பெற்றுக் கொடுப்பதற்கு உதவிய நற்கூலியும் கிடைக்கும்.

இந்த சகோதரியை நேரில் சந்தித்து உதவ விரும்புபவர்கள் சகோதரர் ராபித் அவர்களை +94778788569 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

அத்துடன் கொழும்பிலுள்ள அல் முஸ்லிமாத் நிறுவனத்தின் ஊடாகவும் இவருக்கான உதவியினை பின்வரும் வங்கிக் கணக்கு இலக்கம் மூலமாகவோ அல்லது கீழ்வரும் முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.

Account : Almuslimaath,
Account number: 009010243143
Hatton National Bank,
தொலைபேசி இல: +9411 2736577



A96066G_4x6_@125 --.jpgThe pretty young girl you see in the 1st picture  looks like this now ( see picture 2) due  to a reaction to a common drug given to her for a simple illness. Besides she is almost blind now as both her eyes are affected totally. 

No comments:

Post a Comment