உங்களது ஃபித்ராவை வழங்கி விட்டீர்களா ?


ஃபித்ரா எனும் தர்மம் இரண்டு நல்ல நோக்கங்களின் அடிப்டிடையில் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. 

நோன்பு நோற்றிருந்த பொழுது நாமும் மனிதர்கள் என்ற ரீதியில் நம்மையும் மீறி விட்ட சிறிய தவறுகள் பாவங்களாக மாறி விடாமல் ஃபித்ரா தர்மம் தடுத்து விடுகிறது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும்இ ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)இ நூல் : அபூதாவூத் 1371இ இப்னுமாஜா 1817

தினந் தோறும் பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டு தெருத் தெருவாக உணவு கேட்டுத் திரியும் பரம ஏழைகள் பெருநாள் தினத்தன்றாவது  நம்மைப் போல் அவர்களும் தங்களுடைய குடும்பத்தார்களுடன் நிம்மதியாக உண்டு புசிப்பதற்கு நாம் வழங்குகின்ற ஃபித்ரா தர்மம் உதவுகிறது.



இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் அதுபோல் வெளியிடப்படும். அதனால் உங்கள் ஃபித்ராவை பெருநாள் தொழுகைக்கு முன்பதாகவே வழங்கி நோன்பு நோற்றிருக்கும் போது செய்திட்ட சிற் சில தவறுகளை இறைவன் மன்னித்திடுவதற்கு தயாராகுங்கள்.

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 15031509  

No comments:

Post a Comment