ஒரு புதிய உதயம் - யூனிட்டி மீடியா நியூஸ்

இதை படிக்க தாங்கள் ஒதுக்கும் சில நொடிகளுக்கு, முதற்கண் எமது நன்றிகள். 

இன்றைய இணைய உலகில் தமிழ் மொழி அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதி முன்னேறிய குவாண்டம் அறிவியல் முதல் கலை, புதினம், பழந்தமிழ் இலக்கியம் வரை பெரும் சாதனைகள் பல புரிந்து தமிழர்களை 'அறிவியலுக்கு அறிமுகப்படுத்தி உயர்த்தி'  மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தஞ்சைஅதிராம்பட்டினத்தை சேர்ந்தவரும் யுனிகோடு தமிழ் உருக்களை உருவாகியவருமான  மறைந்த. யுனிகோடு உமர் தம்பி போன்ற சிலர் அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்டு இனம், மதம் யாவற்றையும் கடந்து தங்களை கணணி மற்றும்  இணைய தமிழ் மொழிக்காக அர்ப்பணித்து எடுத்த  முன்முயற்சியால் இன்று  இணையத்தில் 'தமிழுக்கு' இந்த மாபெரும் முன்னேற்றம் சாத்தியமாகி உள்ளது.

எனினும், இணையத்தில் தமிழ் மொழி இருப்பின் அளவு அதிகரித்தது போன்று தரம் உயர்ந்திருக்கின்றதா என்றால், சற்று வருத்தத்துடன் நாம் தலை குனிய வேண்டியுள்ளது.

தரமற்ற நகைச்சுவை, அறிவற்ற கிண்டல், நடிகர் நடிகைகள் குறித்த 'மஞ்சள் பத்திரிகை' கிசு கிசு, பாலியல் தளங்கள், தந்திரமாக அதிக வாசகர்களை பெற்று முன்னணிக்கு வரும் பயனற்ற 'வலைப்பூக்கள்' என தமிழ் இணையம் நிறைந்து வழிந்து, நமது அடுத்த சந்ததியினரை அறிவற்றோராக மாற்றி விடும் அபாயத்தில் உள்ளோம்.

இன்றைய தமிழ் இணைய நிலையை கண்டால், அதற்கு அயராது பாடுபட்ட சுஜாதா, உமர் தம்பி போன்ற முன்னோடிகள் வேதனை அடைவார்கள்.

இந்நிலையை மாற்ற 'தமிழ் நெஞ்சங்கலான' நாம் தான் உறுதி பூண வேண்டும்.

நல்ல தளங்களை ஆதரித்து யாவருக்கும் தெரிவித்தும், அல்லதான  தளங்களை மறைத்து எவரிடமும் கூறாது வெறுத்து ஒதுக்குவதுமே, நாம் நமக்கும், நமது சந்ததியினருக்கும், தமிழுக்கும், சுஜாதா போன்ற முன்னோடிகளுக்கும் செய்யும் சிறப்பாக இருக்கும்.

இந்த  வகையில் எமது செய்தித்தளமான http://tamil.unitymedianews.comசெய்திதளத்தை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்வடைகிறோம். எனவே தாங்கள் எமது இந்த தளத்திற்கு அடிக்கடி வருகை புரிந்து ஆதரவளிப்பதொடு மட்டுமின்றி உங்களது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், மற்றும் அறிந்தவர் தெரிந்தவர் யாவருக்கும் இதை பற்றி கூறி ஆதரவளிக்க பணிவன்புடன் வேண்டுகிறோம்.

விடைபெருமுன் தாங்கள் எமது இந்த வேண்டுகோளை ஏற்று எமது தளத்திற்கு வந்து பயன்படுத்தி மற்றவர்களுக்கும் தெரிவிக்க ஒதுக்கும் சில நிமிடங்களுக்கு எமது முன் கூடிய நன்றிகள் பல.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள,

எம்.எம்.டி.கான்
ஆசிரியன்,
http://tamil.unitymedianews.com 
மின்னஞ்சல் : editor@unitymedianews.com

No comments:

Post a Comment