காசு பார்கனுமா ? கயிறு திரியுங்கள் !

சென்ற நிதியாண்டில் ( 2010-11), கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதி, 808 கோடி ரூபாயை எட்டி புதியசாதனை படைத்துள்ளது. 


இந்தியாவில்தேங்காய் நார் மூலம் தயாரிக்கப்படும் கயிறு மற்றும் கயிறுசார்ந்த பொருள்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது. சென்ற நிதியாண்டில்நாரினால் செய்யப்பட்ட கயிறு வகைகள்மிதியடிகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதிஅளவு மற்றும் மதிப்பில்முந்தைய நிதியாண்டை விட அதிகரித்துள்ளது.மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சென்ற நிதியாண்டில், 800 கோடி ரூபாய்மதிப்பிற்குகயிறுமற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. 


இந்த இலக்கை விஞ்சிஏற்றுமதி லட்சத்து 21ஆயிரத்து 16 டன் என்ற அளவிற்கு உயர்ந்து, 808கோடி ரூபாயாகஅதிகரித்துள்ளது.முந்தைய 2009-10 ம் நிதியாண்டில்இப்பொருள்களின் ஏற்றுமதி 2லட்சத்து 94ஆயிரத்து 509 டன்னாக இருந்தது. ஆகமுந்தைய நிதியாண்டை விடசென்ற நிதியாண்டில்ஏற்றுமதிஅளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில்முறையே 9சதவீதம் மற்றும்0.4சதவீதம் உயர்ந்துள்ளது.


எனினும் கைத்தறிவிசைத்தறி தரைவிரிப்புகள்கயிற்றினால் ஆன ஜவுளிகள்ரப்பருடன் இணைந்த கயிறு வகைகள் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதிஅளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் குறைந்துள்ளது. இந்திய கயிறு மற்றும் கயிறு பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடுகளில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 


ஏற்றுமதியில்,இந்நாட்டின் பங்களிப்புமதிப்பின் அடிப்படையில் 25.46 சதவீதமாகவும்அளவின் அடிப்படையில்15.82சதவீதமாகவும் உள்ளது.நாட்டின் மொத்த கயிறிழை ஏற்றுமதியில், 96சதவீதத்தை சீனா இறக்குமதி செய்து கொள்கிறது. நம் நாட்டின் கயிறு மற்றும் கயிறு பொருள்களை 108 நாடுகள் இறக்குமதி செய்து வருகின்றன. இந்த பட்டியலில் மேலும் நாடுகள் இணைந்ததையடுத்து இந்த எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment