தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
மனிதநேய மக்கள் கட்சி 24 மணி நேர அவகாசத்தில் தனித்து போட்டி என அறிவித்தது.
இரத்த தான சேவைகள், கல்வி உதவிகள், மார்க்கப் பணிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ முகாம்கள், வட்டியில்லா கடனுதவி திட்டங்கள் என கழகப் பணிகள் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது.
பல ஊர்களில் ஜமாத்துகள் சார்பில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று காயல்பட்டிணம், கீழக்கரை,அதிரை போன்ற பல மஹல்லாக்களில் மமக வேட்பாளர்களை நிறுத்தாமல் சமுதாய முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு சென்னை மாநகராட்சியில் 60வது வார்டில் சீமா பஷீர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்று மமக வேட்பாளர் 55வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மமக வேட்பாளர், போட்டியிலிருந்து வாபஸ் பெற்றிருக்கிறார்.
மமக சார்பில் கிருஸ்தவர்கள், இந்துக்கள், தலித்துகள், பெண்கள் என பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
24 மணி நேர அவகாசத்தில் புதிய முடிவை எடுத்து மமக தனது பலமுள்ள களங்களில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் சங்கங்கள் நற்பணி மற்றும் தொண்டு அமைப்புகளின் ஆதரவைப் பெரும் முயற்சியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மமக தொண்டர்கள் தனிநபர் சந்திப்புகளிலும், பிரமுகர்கள் சந்திப்புகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இம்முடிவை முன்பே எடுத்திருந்தால் இன்னும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்ய அவகாசமும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்திருக்கும் என்ற குறை பரவலாக உள்ளது. காரணம் நமது முடிவு தனித்து நிற்பது என்றதும் சங்கராபுரம் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சிகளில் சேர்மன் பதவிக்கு மமக சார்பில் இன்று அவசர அவசரமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காட்டுமன்னார்குடி பேரூராட்சியில் பொறியாளர் விமல்ராஜ் பேரூராட்சி தலைவருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஆனால் இன்னும் ஒருநாள் அவகாசம் கிடைத்திருந்தால் இன்னும் பல இடங்களில் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகியிருக்கும். ஆனால் அதிமுக வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை நீட்டித்து, முடிவுகளைக் கூறாமல் காலம் தாழ்த்தி தந்திரத்தை கடைப்பிடித்ததால் அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
எது எப்படியாயினும் ஒடுக்கப்பட்ட மற்றும் உணர்வுள்ள சிறுபான்மை மக்கள் கூடுதல் பிரதிநிதித்துவத்தைப் பெற உற்சாகமாக களமாடத் துணிந்த மமகவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment