நூற்றுக்கணக்கான படிப்புகள் தற்போதைய கல்விச் சந்தையில் வழங்கப்பட்டாலும், உங்களின் திறனுக்கும், ஆர்வத்திற்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானவற்றை படித்தால், உங்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
வேலைவாய்ப்புக்காகவே படிப்பு என்ற நிலையில், அது பட்டப்படிப்பா, சான்றிதழ் படிப்பா எனப் பார்க்கத் தேவையில்லை என்னும் அளவுக்கு இன்றைய தலைமுறையின் கல்வி மீதான பார்வை மாறிப்போயிருக்கிறது. "பட்டம் வாங்குவதை விட வேலைவாய்ப்பு பெறுவதுதான் முக்கியம். தொலைநிலைக் கல்வி வழியில் பட்டப்படிப்பு படிக்க முடியும்; ஆனால், அதே வழியில் வேலைவாய்ப்பைப் பெற முடியாது&' என்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.
பட்டப்படிப்புடன் தொடர்புடைய ஏதேனும் சான்றிதழ் படிப்புகளைப் படித்து விட்டு, தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். வேலைவாய்ப்பைப் பெற பட்டம் தேவையில்லை,தொடர்புடைய துறையில் திறன்தான் வேண்டும் என்ற அளவுக்கு மாறிப்போயிருக்கிறது இன்றைய நிலை. சில மாணவர்கள் தேர்வு செய்யும் சான்றிதழ் படிப்பு அங்கீகரிக்கப்பட்டதா என்பதைக் கூட பொருட்படுத்துவதில்லை; கூடுதல் திறனை அதிகரித்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொழில்கல்வி(வொகேஷனல்), கல்வி(அகடமி) என இருநிலைக் கல்வி இந்தியாவில் இருக்கிறது. உயர்கல்வி அளவுக்கு தொழில்சார் கல்வியை தரமானதாக இந்திய இளைஞர்கள் கருதவில்லை. நல்லவேளையாக இந்த பார்வை இப்போது மாறிப்போயிருக்கிறது.
உண்மைதான், கற்பித்தல் தொழில்நுட்பம்(எஜுகேஷனல் டெக்னாலஜி) சான்றிதழ் படிப்பை முடித்த21வயது இளம்பெண் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். மூன்று மாதங்களில் இருந்து ஓர் ஆண்டு வரையிலான இதுபோன்ற சான்றிதழ் படிப்புகள் உங்களுக்கான வேலையை உறுதிப்படுத்துகின்றன.
பட்டப்படிப்பு படிக்கும் போதே, தொலைநிலைக் கல்வி முறையில் பயில சில சான்றிதழ் படிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
பட்டப்படிப்பு படிக்கும் போதே, தொலைநிலைக் கல்வி முறையில் பயில சில சான்றிதழ் படிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கலை, அறிவியல் இரண்டுக்கும் பொதுவான படிப்புகள்:
1)கணினி பயன்பாட்டியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்)
2) சந்தை ஆய்வு மற்றும் புள்ளியியல் (மார்க்கெட் ரிசர்ச் அண்டு ஸ்டாட்டிஸ்டிக்ஸ்)
3) நகை வடிவமைப்பு (ஜுவல்லரி டிசைன்)
4) அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ்
5) ஏரோபிக்ஸ் அண்டு பிட்னஸ்
6)அலுவலக மேலாண்மை மற்றும் செயலியல் நடைமுறை ஆபிஸ் மேனேஜ்மென்ட் அண்டு செகரட்டேரியல் பிராக்டிஸ்
7) ஆலோசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் (கவுன்சிலிங் அண்டு கைடன்ஸ்)
8) பேரிடர் மேலாண்மை (டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்)
9)உணவு மற்றும் ஊட்டச்சத்து (புட் அண்டு நியூட்ரிசியன்)
10)சுற்றுலா(டூரிசம்)

கலை படிப்புகளோடு தொடர்புடையவை:
1)சுற்றுலா வழிகாட்டி மற்றும் வெளிநாட்டு மொழிகள்(டூரிஸ்ட் கைடு அண்டு ஃபாரின் லாங்வேஜஸ்)
2)விளம்பரம்(அட்வர்ட்டைசிங்)
3)பத்திரிகை மற்றும் ஊடகவியல் (ஜர்னலிசம் அண்டு மீடியாக ஸ்டடிஸ்)
4)கமர்ஷியல் ஆர்ட்
5)மொழிபெயர்ப்பு(டிரான்ஸ்லேஷன்)
6)தொகுத்தல் மற்றும் பிழைதிருத்தம்(காப்பி எடிட்டிங் அண்டு புரூப் ரீடிங்)
7)படைப்பாக்கத்திறன் (க்ரியேட்டிவ் டிசைன்)
8)யோகா மற்றும் மாற்றுமுறை மருத்துவம்
9)உடல்நலக் கல்வி(ஹெல்த் எஜுகேசன்)
10)கிராமப்புற மேம்பாடு( ரூரல் டெவலப்மென்ட்)

வணிகவியல் சார்ந்த சான்றிதழ் படிப்புகள்:
1) வரி, வரித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை( டேக்சேஷன்/டேக்ஸ் பிளானிங் அண்டு மேனேஜ்மென்ட்)
2)விற்பனை மற்றும் சந்தை மேலாண்மை (சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்)
3)நுண்ணியல் நிதி மற்றும் பேரியல் நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ் அண்டு மேக்ரோ என்டர்பிரைசஸ்)
4)மேலாண்மைக் கணக்குப்பதிவு(மேனேஜரியல் அக்கவுண்டிங்)
5)சர்வதேச வணிகம் (இன்டர்நேஷனல் பிசினஸ்)
6)காப்பீடு மற்றும் நிதிச் சேவை (இன்ஸ்யூரன்ஸ் அண்டு பைனான்ஸ் சர்வீஸ்)
7)தொழில்சார் பணச்சந்தை( இன்டஸ்ட்ரியல் மணி மார்க்கெட்)
8)மின்வணிகம் மற்றும் இணையதளப் பயன்பாடு( இகாமர்ஸ் அண்டு இன்டர்நெட் அப்ளிகேஷன்ஸ்)
9)செலவுக் கணக்கியல் (காஸ்ட் அண்டு வொர்க்ஸ் அக்கவுண்டன்சி)
10) வணிக மேலாண்மை( பிசினஸ் மேனேஜ்மென்ட்)

அறிவியல் பிரிவு சார் சான்றிதழ் படிப்புகள்:
1)காப்பீட்டுக் கணிப்பு அறிவியல் (ஆக்சுவரியல் சயின்ஸ்)
2) உயிரி தகவலியல் (பயோ இன்பர்மேட்டிக்ஸ்)
3) ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி
4)இயந்திரமயமாக்கல் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்)
5) உணவு ஆய்வு மற்றும் தர உறுதி (புட் அனலைசிஸ் அண்டு குவாலிட்டி அஸ்யூரன்ஸ்)
6) தடய அறிவியல் (ஃபாரன்சிக் சயின்ஸ்)
7)உயிரி வளங்கள் மற்றும் பயன்பாட்டு யுக்திகள் (பயோ ரிசோர்சஸ் அண்டு யூடிலிசேஷன் டெக்னிக்ஸ்)
8)ஒலிப்பதிவு மற்றும் மறுஉற்பத்தியாக்கம் (சவுண்டு ரெகார்டிங் அண்டு சவுண்டு ரீபுரடக்சன்)
9)தொலை தொடர்பு மேலாண்மை( டெலி கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட்)
10) புள்ளியல் தரக்கட்டுப்பாடு (ஸ்டாட்டிஸ்டிகல் குவாலிட்டி கன்ட்ரோல்)

No comments:
Post a Comment