திருவண்ணாமலையில் விநாயகர் சிலைக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவண்ணாமலையில் ஏராளமான இடங்களில் 53 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
வளையல்கார தெருவில் இருந்த செல்வ விநாயகர் கோவில் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இந் நிலையில் அந்த இடத்தில் ஐந்தரை அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வந்தன. இந் நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் விநாயகர் சிலை திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த டி.எஸ்.பி. ரமேஷ்பாபு, ஏராளமான போலீசாருடன் அங்கு வந்தார்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலைக்குத் தீ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி காவேரி, மகன்கள் பாரி, தசரதன், மகன் தேவி ஆகிய 5 பேர் மீது சந்தேகம் உள்ளதாக பொது மக்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து அந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment