மொறு மொறு

மாரடைப்பு உள்ளிட்ட இதய கோளாறுகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிக கொழுப்பு சத்துள்ளபொரித்தவறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள்ஆராய்ச்சியாளர்களின் அட்வைஸ். ஆனால்அதற்கு மக்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் தரவில்லை என்ற உண்மைசமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. உணவியலாளர் மின்டல் தலைமையில் ஆன்லைனில்,விருப்ப உணவுகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
காலை சிற்றுண்டிக்கு வறுத்தபொரித்த டோஸ்ட் உணவு வகைகளுக்கே கருத்து கணிப்பில் முதலிடம் கிடைத்துள்ளது. 81 சதவீதம் பேர் மொறுமொறு உணவுகளையே விரும்புகின்றனர். டோஸ்ட் மீது இனிப்பு அல்லது சாக்லெட் டாப்பிங் செய்து சாப்பிட விரும்புவதாக பலர் தெரிவித்துள்ளனர். சிற்றுண்டிக்கு பிறகு சூடான அல்லது குளிர்பானம்பழங்கள் கட்டாயம் தேவை என்கின்றனர் ஒரு பகுதியினர். அடுத்து காரம்காபிசேவரி அயிட்டங்கள் காலையில் அவசியம் என்பது கணிசமானவர்களின் ருசியாக உள்ளது. 
மிகச் சிலர் மட்டுமே சிற்றுண்டி பற்றி கவலைப்படாதவர்கள். சிற்றுண்டியா... அதற்கு எங்களுக்கு நேரமே இல்லை. கிடைத்ததை கிடைத்த இடத்தில் சாப்பிடுவோம். நேரத்துக்கு ஏற்றபடி சிற்றுண்டியை தவிர்ப்பதும் உண்டு என்பது அவர்களின் தத்துவம். மொத்தத்தில் வயது வித்தியாசமின்றி பத்தில் பேர் கலோரி கவலையே சிறிதுமின்றி ஜங்க் ஃபுட் மற்றும் பொரித்த,வறுத்த டோஸ்ட்களுக்கே முதலிடம் தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தை சுண்டல் போன்ற புரத உணவுகளும் 3-வது இடத்தை பழ வகைகளும் பிடித்துள்ளன.
இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்ஆரோக்கியத்துக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது ஆய்வில் நிரூபணமாகி உள்ளது. எத்தகைய சூழ்நிலையிலும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி அத்தியாவசியம். பொரித்த வகை உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் இதய கோளறுகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது. எதிலும் வரும்முன் காப்போம்’ என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்’’என்றனர்.

No comments:

Post a Comment