மரணம்தான் சந்தேகமேயில்லை?


இவ்வசனத்தில் (15:99) "யக்கீன் வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!'' எனக் கூறப்படுகிறது. யக்கீன் என்றால் உறுதியான ஒரு நிகழ்வு என்று பொருள். உலகத்தில் யாரும் சந்தேகிக்காத எந்த மனிதரும் ஏற்றிருக்கின்ற ஒரு நிகழ்வு இருக்கிறது என்றால் அது மரணம் தான்.

மரணம் வரும் வரை இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து. "உறுதி வரும் வரை வணங்க வேண்டும்உறுதி வந்தவர்கள் வணங்கக் கூடாதுஎன்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனென்றால் மனிதர்களில் அதிகமான உறுதியைப் பெற்றவரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை வணங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால் கடைசி வரை அவர்கள் இறைவனை வணங்கினார்கள்.

எனவே "உறுதி வரும் வரை வணங் குவீராக'' என்பது தவறான கருத்தாகும். "மரணம் வரும் வரை வணங்குவீராக'' என்பது தான் இதன் சரியான பொருள்.

இதை திருக்குர்ஆன் 74:47 வசனத்திலிருந்து தெளிவாக அறியலாம். இவ்வசனத்தில் தீயவர்கள் யக்கீன் வரும் வரை தவறில் மூழ்கிக் கிடந்ததாகக் கூறுவது இடம் பெற்றுள்ளது. இவ்வசனத்தில் யக்கீன் என்பதற்கு மரணம் என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

உறுதி வந்து விட்டால் வணங்க வேண்டுமா ?


மரண சாசணங்கள்


இயற்கை மரணம் என்றால் என்ன்?


கடலில் இறந்தவருக்கு புதைகுழி ஏது


சந்தேகமில்லாத மரணம்

No comments:

Post a Comment