நம் ஊரின் மொத்த மக்களும் வாழும் இடத்தை விட்டு விட்டு,கரையூர் தெருவில் இருக்கிறது பொது நூலகம்.இதனால் நம் மக்களுக்கு அறவே பயன் இன்றி தொண்ணூறு சதவீத மக்களை புறக்கணித்து,பத்து சதம் மக்கள் வாழும் இடத்தில் இந்த நூலகம் அமைந்துள்ளதால் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் நூலகம் சென்று படிக்க இயலாமல் போய் விடுகிறது.
இதற்காக அந்த நூலகத்தை கொண்டு போய்,அதிகம் மக்கள் வாழும் பகுதிகளில் வையுங்கள் என நாம் சொல்ல வரவில்லை.அந்த நூலகம் அங்கேயே இருக்கட்டும்,நம் ஊருக்கென்று இன்னொரு நூலகம் அவசியம் தேவை.பள்ளி,கல்லூரி மாணவர்கள்,பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள - இன்னொன்று அவசியம்.அதை ஜாவியா,பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு போன்ற இடங்களில் அமைத்தால் எல்லா மக்களும் பயன்பெறுவர்.
நூலகம் அங்கும் தேவை,இங்கும் தேவை.தொண்ணூறு சதவீத வரி கட்டும் மக்களை புறந்தள்ள வேண்டாம் என தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு,நம் சேர்மன் அஸ்லம் அவர்கள் இன்னொரு நூலகம் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே நம் வேண்டுகோளும்,அவாவும்.
No comments:
Post a Comment