துஆ


நம்முடைய சந்ததிக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் அவசியமான ஒன்று . வல்ல அல்லாஹ் நமது பிரார்த்தனையை அங்கீகரிக்கும் பட்சத்தில் நமக்கு கண் குளிர்ச்சி தருபவர்களையும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் வளர்ச்சியிலும் பங்கு கொள்ளும் தூய முஸ்லிம்களையும் நம் சந்ததிகளாக வழங்குவான்.

இப்ராஹிம் (அலை), இஸ்மாயீல் (அலை) கஅபாவின் அடித்தளத்தை உயர்த்திய பொழுது செய்த துஆ :

'எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.''  -அல்குர்ஆன் 2:128

ஜக்கரியா (அலை) அவர்கள் கேட்ட துஆ 

''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."" -அல்குர்ஆன் 3:38

''என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்"" - அல்குர்ஆன் 21:89

இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆ 

"(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!''  -அல்குர்ஆன் 14:40


''என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக'' - அல்குர்ஆன் 37: 100


மூஸா  (அலை) அவர்கள் கேட்ட துஆ 



என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக! 
அல்குர்ஆன் 20:29

அர்-ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் துஆ 

''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! அல்குர்ஆன் 25:74

பெற்றோருக்கான துஆ:

இப்ராஹிம் ( அலை)  அவர்கள் கேட்ட துஆ:
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக''  அல்குர்ஆன்14: 41

அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு கற்று கொடுத்த துஆ: 

''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!'' அல்குர்ஆன் 17: 24

சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட துஆ:

''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!'' -அல்குர்ஆன் 27:19

No comments:

Post a Comment