நிணநீர்த் தொகுதி என்றால் என்ன?
சரீரத்தின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் நாடி நாளங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். இவற்றின் சிலவற்றை உங்கள் கைகளில் கீழ்ப்புறத்தில் காணலாம். இதயமும் இரத்தக் குழாய்களும் குருதிச்சுற்றோட்டத்தின் பங்கை கொண்டுள்ளன. குருதிச் சுற்றோட்டத்தை விட நிணநீர் தொகுதி என்று ஒரு பகுதி உண்டு. இது நிணநீர் தொகுதியினுள் அசைந்து திரியும் நிணநீர் (Tissue fluid) இரத்தத்தோடு கலந்து கொள்கிறது. நிணநீர் முடிச்சுக்கள் என்பது ஒரு வீக்கம் அல்லது தடிப்பு. இப்படியான தடிப்பு உடலின் சிற்சில பாகங்களில் தோன்றுகிறது. அதாவது கழுத்து, அக்குள் (arm pit), அரைப்பூட்டு(groin) ஆகிய இடங்களில் உங்களுக்கு தொண்டைப்புண் (sorethroat) ஏற்படும் போது கழுத்துப்பாகத்தில் இவ்விதமான வீக்கம் இருப்பதை நீங்கள் அவதானித்து இருக்கக் கூடும்.
யானைக்கால் என்றால் என்ன?
சரீரத்திலே இருக்கும் ஒருவகை கிருமி ஆகும். இது நிணநீர் சுரப்பிகளையும் குழாய்களையும் தாக்குகிறது. இந்த நோய் வரக் காரணமாக இருக்கும் இக்கிருமி FILARIA என்றும் யானைக்கால் நோய் என்றும் அறியப்பட்டுள்ளது.
இது எதனால் ஏற்படுகிறது?
எப்படிப் பரவுகிறது என்பதை சிறிது பார்ப்போம் .யானைக்கால் நோய் ஒருவகை ஒட்டுண்ணிக் கிருமியினால் உண்டாகிறது. இது பல வகை நுளம்புகளினாலேயே பரவுகிறது. சில நுளம்புகள் இளம் கிருமியினாலே தொற்றுக்குட்பட்டு இருக்கும். இந்நுளம்புகள் எங்களுக்கு கடிக்கும் போது யானைக்கால் நோய்க்கிருமிகள் உடலினுள் செலுத்தப்படுகிறது. இந்தக் கிருமிகள் குறிப்பாக அரைப்பூட்டு நிணநீர் சுரப்பியினுள் செல்கிறது. இவை ஒன்பது மாதங்களுக்குள் முதிர்ச்சியடைந்து பின்பு பன்னிரண்டு வருடங்கள் வரை எமது உடலினுள் வாழக் கூடியதாக இருக்கிறது. இந்த முதிர்ந்த கிருமிகள் அனேகம் முதனிலை (larva) கிருமிகளை எமது இரத்தத்தில் சேர்க்கும். நுளம்புகள் எம்மை கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது இம் முதனிலை கிருமிகளும் இரத்தத்துடன் கடத்தப்பட்டு பின் வேறொருவரை கடிக்கும் பொழுது இந்த நோய் அவருக்கு உண்டாகிறது.
யானைக்கால் நோயை எப்படி இனம் கண்டு கொள்வீர்?
யானைக்கால் நோய் கிருமிகளை தங்கள் உடலினுள் கொண்டுள்ள அனேக மக்கள் நோய்வாய்ப்படுவதில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதிலும் இந்நோய் வெளிக்காட்டப்படாமலே இருக்கலாம். ஆனால் ஒரு சிலரில் வெவ்வேறு வழிகளில் காணப்படும். ஆரம்பத்தில் நிணநீர் சரப்பிகளிலும் நிணநீர் குழாய்களில் நோவும் வீக்கமும் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். ஆண்களுக்கு ஆண் விதையில் வீக்கம் ஏற்படும். நீண்ட நாட்களுக்கு கிருமிகள் அரைப்பு மூட்டுகளில் (groin) இருக்குமாயின் அவை நிணநீர் கால்வாய்களை செயலிழக்கப் பண்ணும். அப்படியான ஓர் நிலை ஏற்படும் போது கால்களில் வீக்கம் உண்டாகும். இந்நோயின் ஆரம்ப காலத்தில் உண்டாகும் இவ் வீக்கம் நிலையாக நில்லாது. ஆனால் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்குமாயின் கால்களில் நிரந்தர வீக்கம் காணப்படும். சில வேளைகளில் பருத்த அசிங்கமான கால்களை உடையவர்களை யானைக்கால் நோயோடு சிலர் ஒப்பிடுவர். ஆனால் இவ்விதமான வீக்க நிலை ஒரு சிலரிலேயே காணப்படுகிறது.சிலருக்கு இக் கிருமிகள் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு இருமல், தொய்வு போன்ற நோய்கள் உண்டாகிறது. இவர்களுடைய உமிழ்நீரில் சிலவேளை சிறிது இரத்தம் காணப்படவும் கூடும். இரத்தத்தில் சிறிது அதிகமான அமில கலங்கள் (eosinophils) இருப்பதே இதற்கு காரணமாகும். இந்த நிலை நுரையீரலை பாதிக்கும். றொப்பிக்கல் பள்மனறி இயோசினாபிலியா (tropical pulmonary eosinophilia)என்று அழைக்கப்படும்.
யானைக்கால் வியாதி (elephantiasis) என்றால் என்ன ?
பைலேரியா என்படும் ஒரு வகை ஒட்டுண்ணிப்புழு ஒருவருடைய உடலிலே விசேடமாக அழைப்பூட்டில் அநேக காலம் வாழ்ந்து அவருடைய உடலிலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நிணநீர் குழாய்கள் அடைக்கப்படுவதனால் கால்களில் வீக்கம் உண்டாகிறது. ஆரம்பத்திலே இந்த வீக்கம் அதிக நாட்கள் தொடர்ந்து இருக்காது வற்றிப் போகும். எனவே குழாய்களின் வேலை தடைப்படுவது மட்டுமல்லாமல் இந்த நோயாளிகளுக்கு அந்தக் காலிலே வெவ்வேறு தொற்று நோய்களும் உண்டாகலாம். இதனால் மேலும் நிணநீர் குழாய்களும் அடைக்கப்படுகின்றன. அப்பொழுது இந்தக் கால் வீக்கம் நிரந்தரமாகவே ஏற்படுகிறது. மேலும் காலின் பளபளப்புக் குன்றி தோல் தடிப்பாக மாறிவிடுகிறது. இப்படி இருக்கும் ஒரு நோயாளியின் கால்கள் யானைக்காலை போன்று தோற்றம் அளிப்பதால் யானைக்கால் நோய் என்று கூறிக் கொள்கிறார்கள்0 .இந்த நோய் முழங்காலின் கீழ்ப்பகுதியிலே அதிகம் பாதித்து ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலுமோ வரக்கூடும். சில சமயங்களில் அரைப்பூட்டையும் தாக்கக் கூடும். அதனால் கைகளை தாக்கும் சாத்தியம் இல்லை.
யாருக்கு யானைக்கால் நோய் உண்டாகிறது?
இலங்கையில் தென்மேற்குப் பகுதியில் புத்தளம் முதல் கதிர்காமம் வரையுள்ள கடற்கரையோரமுள்ள இடங்களில் வசிக்கும் மக்களிடையே இந்த நோய் அதிகமாக காணப்படுகிறது. இன்னும் நாட்டின் உட்பகுதியிலும் பொல்காவலை, வியாங்கொடை, பேலியகொடை, மகரகம ஆகிய இடங்களிலும் இந்நோய் காணப்படுகிறது. இந்த நோயைப்பரப்பும் நுளம்புகள் நாட்டின் எல்லாப் பகுதியிலும் பரவலாகக் காணப்படுவதால் விசேடமாக நாட்டின் கரையோரப் பருதிகளில் வாழும் மக்களின் உடலிலேயே இந்தப் பைலேரியா நோய்க் கிருமிகள் இருக்கின்றன. சில கணக்கெடுப்புக்களின் மூலம் ஓர் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களில் 3-8% வீதமானோர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியப்படுகிறது. இந்நோய் சிறுவர்கள், பிள்ளைகள், வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லோரையும் பாதிக்கின்றது. நாட்டின் குளிரான மத்திய மலைப் பிரதேசங்களில் இந்நோய் அதிகமாகவே காணப்படுகிறது.
யானைக்கால் நோயைக் கண்டுபிடிக்க என்ன ஆய்வுகூடச் சோதனைகள் உதவுகின்றன?
நோயாளியில் காணப்படும் அடையாளங்கள் அறிகுறிகளிலிருந்தே இந்நோய் அதிகமாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. WBC என்னும் இரத்தச் சோதனையைச் செய்து இயோசினோபிலியாவை கண்டுபிடிக்க முடியும் இரத்தத்தில் அதிகமாக இயோசினோபில்ஸ் என்னும் ஒருவகை குருதிக்கலங்கள் கூடுதலாகக் காணப்பட்டால் அவருக்கு யானைக்கால் நோய் உண்டு என்பதற்குச் சாதகம் அளிக்கிறது. இந்நோய்க்குக் காரணமாக இருக்கும் இளம் கிருமிகளை (Iarva)இரவு வேளைகளிலே இரத்தத்தில் இலகுவில் இனங்கண்டு கொள்ளலாம். ஆகவே யானைக்கால் நோயை அறிந்து கொள்வதற்கு இரத்தப் பரிசோதனை இரவு 8 அல்லது 10 மணுக்குப் பின்பே செய்யப்பட வேண்டும். சாயம் ஊட்டப்பட்ட குருதியை நுணுக்குக் காட்டியினூடாகப் பார்த்து யானைக்கால் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நோயின் விளைவாக குருதியில் உண்டாகும் பிறபொருளெதிரிகளும் அடையாளம் காண F.A.T எனும் ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்படுகிறது. இச்சோதனையின் முடிவை நோயாளியின் குணங்குறிகளோடு ஒத்துப்பார்த்து கணிக்கவேண்டும். TPE என்ற நோய் இருப்பதாகச் சந்தேகம் ஏற்படின் நெஞ்சுக்கதிர் படம் X-ray எடுக்கவேண்டும்
யானைக்கால் நோயை குணப்படுத்த முடியுமா?
ஆம்
டையீத்தைல் காபமசிப்பீன் Diethylcarbamazine நோயைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. நோயின் ஆரம்பத்திலே இது சிறந்த பலனைக் கொடுக்கிறது. இம்மருந்துச் சிகிச்சை 2 அல்லது 3 வாரங்களுக்குக் கொடுக்கப்டுகிறது. இந்நோய் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நோயாக இருப்பதனால் நோயாளிக்கு இந்தச் சிகிச்சை பல தடவைகள் கொடுக்கப்பட வேண்டும். நுளம்புகள் அடிக்கடி கடித்து மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படுவதாலும் பல தடவை சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகிறது. யானைக்கால் நோய் அறிகுறி உள்ளவர்களும் இரவில் செய்யப்படும் இரத்தப் பரிசோதனையில் கிருமி இருப்பவர்களும் திரும்பத் திரும்ப செய்யப்படும் சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் பெறுவர்.
நுளம்புகளை என்ன செய்யலாம்?
யானைக்கால் நோயைப் பரப்பும் பல இன நுளம்புகள் இலங்கையிலே உண்டு. இவை தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலே அதாவது சில்லுகள், தேங்காய், அல்லது இளநீர் சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கி நிற்கும். நீரிலும் பல்கிப் பெருகி விருத்தியடைகின்றன. இப்படியான பொருட்களை புதைத்து விடுவதனாலே நுளம்புகளின் விருத்தியைக் குறைக்கலாம்.
யானைக்கால் நோயைத் தடுக்க முடியுமா?
இலங்கையின் சில பகுதியிலே இந்த நோயாளர் அதிகமாக இருக்கிறார்கள். நுளம்புகளும் அதிகமாக உண்டு. நோய்க்காவியான நுளம்பு கடிப்பதனால் நோய் பரவுகிறது. ஒரு பகுதியில் மட்டும் இந்நோய் பரவிக் கொண்டு போனால் அதைத் தடுப்பது மிகவும் கஸ்டம். எனினும் நுளம்பு வில்லைகளையோ அல்லது நுளம்புக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய மருந்து வகைகளை பூசுவதனாலேயே இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அவர்கள் யானைக்கால் நோய் உள்ள பிரதேசத்தில் சில நாட்களைக் களிக்க வேண்டி நேரிடின் சிகிச்சையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து எடுப்பதன் மூலம் அவர்கள் இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
யானைக்கால் நோயைத் தடுக்க என்ன செய்யலாம?
யானைக்கால் நோய்க் கிருமிகளை உடலிலே கொண்டுள்ள மக்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பிரதிபலிப்பைக் காட்டுகின்றனர். சிலரில் நோய் அறிகுறிகள் வெளிப்படாது. மற்றும் சிலரில் நோய்குரிய அறிகுறிகள் காணப்படும். வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறு விதமாக இந் நோய் வெளிக்காட்டுவதன் காரணம் தெரியாது. எனினும் இந்நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் கால் யானையின் கால்களைப் போல் வராது தடுப்பதற்கு சில புத்திமதிகள் இங்கே குறிக்கப்பட்டுள்ளன.DEC சிகிச்சையை மீண்டும் மீண்டும் செய்தல் முதலில் கால் வீக்கம் உள்ளவர்கள் நோயை மேலும் வளரவிடாது தடுத்து அல்லது நோயின் தாக்கத்தைக் குறைப்பதன் மூலம் நிணநீர்க்குழாய்களில் அடைப்பு ஏற்படாதபடி தடுத்துக் கொள்ளலாம். இந்நோய் மீண்டும் மீண்டும் வரும் ஒரு நோயான படியால் மாதத்துக்கு ஒருமுறை தடுப்பு ஊசி ஆகிய பென்சிலின் மருந்தைக் கொடுக்க வேண்டுமென்று சிலர் அபிப்பிராயப்படுவர் . ஆகவே காலிலே எந்தவிதக் காயமும் ஏற்படாதும் சருமம், நகம் கால் விரல்கள் என்பனவற்றையும் பாதுகாத்துக் கொண்டால் யானைக்கால் நோய் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.
நன்றி:பேராசிரியர் லால் ஜயக்கொடி
தொடர்பு
தொகுப்பாளர்கள்
PILL PROJECTC/o
மருந்தகவியல் திணைக்களம்
தபால்பெட்டி 271கின்ஸி வீதி
கொழும்பு 08
தொலைபேசி 2695230
பக்ஸ் 2689188
No comments:
Post a Comment