தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர்தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள்,அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப்பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள்.இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள்,மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல்பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிரதொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும்,தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர்சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.
போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில்பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/
குறிப்பு:
1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும்.
2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல்ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.
அதற்கான இணைய முகவரி:http://tawp.in/r/2rbo
Best regards,
ASHRAF
No comments:
Post a Comment