கடவுள் கொள்கை!!!

அன்புக்குரிய மாற்று மத நண்பர்களே,இன்னும் சில உண்மை விஷயங்களை இந்து மத மூல நூற்கள் மூலமாகவே காணலாம்,வாருங்கள்.
இந்து மதத்தின் மூலத்தில் கடவுள் கொள்கை எப்படி என்று பாருங்கள்..நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ? ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர் வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர் பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர். ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே..(- சிவ வாக்கிய சுவாமிகள்

ஒன்றே குளம் ஒருவனே தேவன் -திரு மூலர்

இப்படி இந்து மத பெரியவர்கள்,ஆச்சாரியார்கள் எல்லாம். இறைவன் ஒருவனேதான்,அதே போன்று மனித இனமும் ஒன்றேதான் என கூறுகின்றன,அதேபோல,கல்லையும்,மண்ணையும் வணக்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை எனும்,சித்தர்களின் வரியும் பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்னவென்று பாருங்கள்.

அல்குர்ஆன் சொல்கின்றது..'அல்லாஹ் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றும் நிலைத்திருப்பவன். அவனை உறக்கமோ சிறு தூக்கமோ பீடிக்கா..' (அல்குர்ஆன் 2-255)

நபியே கூறுவீராக.. அல்லாஹ் அவன் ஒருவனே.. அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன். அவன் (எவரையும்)பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல் குர்ஆன்)


என்ன நண்பர்களே,இனி சிந்திப்பது நம் கடமை.இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக.ஆமீன்.(அப்படியே ஆகட்டுமாக)

No comments:

Post a Comment