நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். திருக்குர்ஆன் 4:48
எதிர்த்தவர்,ஏற்றார்
சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.
மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.
தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.
ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.
மேலும் அவர் கூறும்போது "சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது".என்றார்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Allah thaan naadiyavarukku hidhayathai kodukkiran
ReplyDelete