இரண்டு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரிடம், படிப்பு எப்படி இருக்கிறது என கேட்டார் ஒருவர் . அம்மாணவன், 'சீட் கிடைத்திருக்கிறது என்பதால் அப்பா, அம்மா சேர்த்து விட்டார்கள்; எனக்கு விரும்பம் இல்லை. பிணத்தை பார்க்க வேண்டியுள்ளது' என்றான்.விருப்பம் இல்லாத பாடத்தை அம்மாணவன் ஐந்து ஆண்டுகள் எப்படி படிப்பான்.
------------------------------------
மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால், அதற்கு அடுத்ததாக உள்ள விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.நிறைய கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதால், கல்வியின் தரம் குறைந்து வருவது உண்மை தான். அதை எல்லாரும் அறிவார்கள். சிவில் படித்த மாணவர்களுக்கு, செங்கல் எவ்வளவு உயரம், நீளம் இருக்கும் என்பது தெரிவதில்லை. வாழ்க்கைக்கு கல்வி மட்டுமே போதாது. சிறந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே கல்வி கற்கிறோம்.
---------------------------------
மாணவர்கள் ஒரு கல்லூரியை, பல்கலைக் கழகத்தை தேர்வு செய்யும் முன், சில விஷயங்களை முக்கியமாக பார்க்க வேண்டும். கல்லூரி, பல்கலைக் கழகங்கள் யு.ஜி.சி., உள்ளிட்ட உயர்கல்வி அமைப்புகளின் அங்கீகாரம், அனுமதியை பெற்றிருக்கிறதா என பார்க்க வேண்டும். இது முதன்மையானது.கல்லூரி, பல்கலைக் கழகங்களின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டட வசதிகள் இருக்கிறதா, நன்கு பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியர்கள் இருக்கின்றனரா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்லூரி அமைந்துள்ள சூழலை பார்க்க வேண்டும்.கல்விக் கட்டணம், மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறதா என பார்க்க வேண்டும்.
------------------------------------
தமிழகத்தில் 445 பொறியியல் கல்லூரிகள் இருந்தும், நாட்டில் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே உயர்கல்வி வாய்ப்பு அமைகிறது.மத்திய அரசு உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கிளை ஆரம்பிக்க சட்ட வழிமுறைகளை கொண்டுவர உள்ளது. வெளிநாட்டிற்கு படிக்க செல்பவர்கள், எம்.எஸ்., பட்டத்துடன், அங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதால் செல்கின்றனர். இங்கு கிளைகளை ஆரம்பித்தால், பட்டத்துடன் வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு உருவாக்கப்படுமா என பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment