Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

பாடப்புத்தகங்களைத் தாண்டி


குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும்அதற்கு முதலில் பெற்றோர் பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க வேண்டும்.  

படிக்கப் படிக்கத்தான் சொற்களின் புழக்கம் அதிகரிக்கும். உலகளாவிய விஷயங்கள் தெரியவரும். தன்னை உணரும் ஆற்றலும் வரும். ஆனால்,வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை வயதானபின் உபதேசிப்பதில் பயனில்லை. வாசிக்கும் பழக்கம் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக வேண்டும். அதற்குப் புத்தகங்கள் படிப்பதன் அவசியத்தை குழந்தைகளிடம் பெற்றோர் உருவாக்க வேண்டும்.

பள்ளியில் படித்து பெறும் பட்டங்களினால் கிடைக்கும் பெருமையைவிட பாடப்புத்தகங்களுக்கு அப்பாலுள்ள புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் அறிவு விசாலமானது. இதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்''  

வாசிக்கும் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏராளமான நூலகங்கள் இருக்கின்றன. குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பொருளாதார ரீதியாக மிக வளர்ச்சி கண்டஅதேசமயம் மனித உறவுகள் குலைந்த சிலரிடம் அண்மையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கிடைத்த உண்மை என்ன தெரியுமாஇப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் ஆங்கிலவழிக் கல்விமுறையில் பயின்றவர்கள்பாடப்புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்.

நாம் நம் குழந்தைகளை எப்படி வளர்க்க எண்ணுகிறோம்கஷ்டமே தெரியாமல் வளர்க்க எண்ணுகிறோம். அவர்கள் பிரியப்படுவதையெல்லாம் வாங்கித் தருவதன் மூலம் பணத்தை விட்டெறிந்தால் எதுவும் கிடைக்கும் என்று அவர்கள் மனதில் பதியவைக்கிறோம். இப்படியாகவாழ்க்கையின் உண்மையான முகம் தெரியாமல் அவர்களை வளர்க்கிறோம். இப்படி வளரும் குழந்தைகள் எப்படி வளரும்அறிவுடன் வளர்கின்றன. ஆனால்,அவர்களிடம் துளியும் அறவுணர்வு இல்லை. நாளை அது நம்மையே பாதிக்கிறது.

பெற்றோர்கள் தயவுசெய்து பாடப்புத்தகங்களைத் தாண்டிச் சிந்தியுங்கள். பாடப்புத்தகங்களால் அறிவை மட்டுமே தர முடியும். அவற்றைத் தாண்டிய ஏனைய புத்தகங்களால்தான் அறவுணர்வைத் தர முடியும். புத்தகங்கள் உங்கள் குழந்தைகளைப் படிப்பாளிகள் ஆக்குகின்றன;படைப்பாளி ஆக்குகின்றனஅவர்களை அறவுணர்வு மிக்க மனிதர்களாய் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் உருமாற்றி அளிக்கின்றன''

 உலகின் மிகப் பெரிய வரலாற்று புருஷர்கள் எவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் வரலாற்று புருஷர்களாக மாறியதற்குப் பின் ஒரு புத்தகம் இருந்திருக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கும். நாம் நம் குழந்தைகளை வரலாற்று புருஷர்களாகப் பார்க்கவே விரும்புகிறோம். ஆனால்அதற்கான அடிப்படையை ஏன் அவர்களுக்குக் கொடுக்க மறுக்கிறோம்?''  எனவே வீட்டிற்கு ஒரு நூலகம் அமைத்து நம் பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை அவசியம் வளக்க வேண்டும்.

தற்​போது மாண​வர்​கள் தேர்​வில் பெறும் மதிப்​பெண்​கள் மூலம் வேலை வாய்ப்​பு​க​ளைப் பெற முடி​யாது.​ இதர மென்​தி​றன் திற​மை​களை கல்வி பயி​லும்​போதே வளர்த்​துக் கொள்​வது அவ​சி​யம்.  
மாண​வர்​கள் வெறும் மதிப்​பெண்​க​ளால் மட்​டும் வாழ்​வில் உயர்​நி​லை​யைப் பெற்​று​விட முடி​யாது.​ அதற்​கும் மேலாக பல்​வ​கைத் திறன்​க​ளை​யும் பண்​பு​க​ளை​யும் வளர்த்​துக்​கொண்​டால் மட்​டுமே முன்​னேற முடி​யும்.​ ​ மாண​வர்​கள் தொடர்ந்து 15 ஆண்​டு​கள் ஆங்​கில மொழி​யைக் கற்​றுக்​கொள்​ளும் வாய்ப்​பைப் பெற்ற ஒரே நாடு உல​கில் இந்​தியா மட்​டுமே.​ மற்ற நாடு​க​ளில் ஆங்​கில மொழிக்கு அவ்​வ​ளவு முக்​கி​யத்​து​வம் கொடுப்​ப​தில்லை.​

ஆனா​லும் பெரும்​பா​லான இந்​திய மாண​வர்​கள் ஆங்​கில மொழித்​தி​றனை வளர்த்​துக் கொள்​வ​தில் பின்​தங்​கிய நிலை​யில் உள்​ள​னர்.​​ வேலை​வாய்ப்​பு​களை வழங்க முன்​வ​ரும் நிறு​வ​னங்​கள் மாண​வர்​க​ளின் கல்​வித்​தி​றனை மட்​டும் எதிர்​பார்க்​கா​மல்,​​ இதர திறன்​க​ளை​யும் எதிர்​பார்ப்​ப​தால் கல்​லூரி வளா​கங்​க​ளில் நடத்​தப்​ப​டும் வேலைக்​கான முகா​மில் 80 சத​வி​கித மாண​வர்​கள் வெற்றி பெற முடி​யாத சூழல் உள்​ளது.​ ​பாடப் புத்​த​கத்​தைத் தவிர,மற்​ற​வர்​க​ளு​டன் உரை​யா​டும் திறன்,படைப்​பாற்​றல் திறன்,சுயக் கட்​டுப்​பாட்​டுத் திறன்,மற்​ற​வர்​க​ளு​டன் இணைந்து பணி​யாற்​றும் திறன்,சகிப்​புத்​தி​றன் உள்​ளிட்ட பன்​மு​கத் திறன்​க​ளை​யும் வளர்த்​துக் கொள்​ளும் மாண​வர்​களே வாழ்​வில் உயர்ந்த இடத்​தைப்​பெற முடி​யும்.

2234 1513 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

கஞ்சாவை கொண்டு சாக்லெட் தயாரித்து தமிழகம் முழுவதும் பள்ளிகல்லூரி மாணவர்களிடையே புழக்கத்தில் விட்ட வேலூரை சேர்ந்தவர், "குண்டர்'சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
உலக போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டுதமிழகம் முழுவதும் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில்சி.பி.சி.ஐ.டி.,யின் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.ஜி.ஆபாஷ்குமார் உத்தரவின்படி,டி.எஸ்.பி.,க்களை தலைமையாக கொண்டு ஏழு தனிப்படை போலீசார் இந்த சோதனையில் கலந்துகொண்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் பீடிசிகரெட் மற்றும் பீடாவில் கஞ்சாவை கலந்து விற்பனை செய்ததாக மூவர் பிடிபட்டனர். அதில்,வேலூரை சேர்ந்த ஆனந்தன் (32) என்பவர் முக்கியமானவர். இவர்கள்தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள்ரயில் நிலையங்கள்பள்ளி,கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளில் இந்த கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்கஞ்சா சாக்லெட்டை தயாரித்து வினியோகிப்பது ஆனந்தன் என்பது தெரியவந்தது. கஞ்சாவை நன்றாக அரைத்து அதில்அதிகளவு சர்க்கரை கலந்து சாக்லெட் போன்று தயாரித்து அவற்றை பழைய சாக்லெட் கவர்களில் அடைத்து வினியோகித்துள்ளார். இவற்றை புரோக்கர்கள் மூலம்,கடைகளில் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து,தனிப்படையினர் சென்னை சென்ட்ரல்எழும்பூர் ரயில் நிலையங்கள்பள்ளிகல்லூரியின் முன்புள்ள கடைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
சோதனையில் எழும்பூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்ததுடன், 10ஆயிரம் கஞ்சா சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தன்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்அவர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதால் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் சோதனை குறித்துபோதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி.ஆறுமுகம் கூறியதாவது: இவர்கள் விற்பனை செய்த போதை சாக்லெட்டை பள்ளிகல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். சிறிய அளவு சேர்த்தால் கூட அதிக போதை தரும் வகையில் சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதை சாக்லெட் விற்பனை செய்யப்பட்டால், 2234 1513 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும்கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிந்தவுடன் சோதனைக்கு செல்வதற்காக தனிப்படை போலீசார் தயாராக உள்ளனர். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். இவ்வாறு ஆறுமுகம் தெரிவித்தார்.

கல்வி !பிடிச்சத படி!!

இரண்டு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரிடம், படிப்பு எப்படி இருக்கிறது என கேட்டார் ஒருவர் . அம்மாணவன், 'சீட் கிடைத்திருக்கிறது என்பதால் அப்பா, அம்மா சேர்த்து விட்டார்கள்; எனக்கு விரும்பம் இல்லை. பிணத்தை பார்க்க வேண்டியுள்ளது' என்றான்.விருப்பம் இல்லாத பாடத்தை அம்மாணவன் ஐந்து ஆண்டுகள் எப்படி படிப்பான்.
------------------------------------

மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால், அதற்கு அடுத்ததாக உள்ள விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.நிறைய கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டதால், கல்வியின் தரம் குறைந்து வருவது உண்மை தான். அதை எல்லாரும் அறிவார்கள். சிவில் படித்த மாணவர்களுக்கு, செங்கல் எவ்வளவு உயரம், நீளம் இருக்கும் என்பது தெரிவதில்லை. வாழ்க்கைக்கு கல்வி மட்டுமே போதாது. சிறந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே கல்வி கற்கிறோம்.
---------------------------------

மாணவர்கள் ஒரு கல்லூரியை, பல்கலைக் கழகத்தை தேர்வு செய்யும் முன், சில விஷயங்களை முக்கியமாக பார்க்க வேண்டும். கல்லூரி, பல்கலைக் கழகங்கள் யு.ஜி.சி., உள்ளிட்ட உயர்கல்வி அமைப்புகளின் அங்கீகாரம், அனுமதியை பெற்றிருக்கிறதா என பார்க்க வேண்டும். இது முதன்மையானது.கல்லூரி, பல்கலைக் கழகங்களின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டட வசதிகள் இருக்கிறதா, நன்கு பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியர்கள் இருக்கின்றனரா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்லூரி அமைந்துள்ள சூழலை பார்க்க வேண்டும்.கல்விக் கட்டணம், மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறதா என பார்க்க வேண்டும்.
------------------------------------
தமிழகத்தில் 445 பொறியியல் கல்லூரிகள் இருந்தும், நாட்டில் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே உயர்கல்வி வாய்ப்பு அமைகிறது.மத்திய அரசு உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் நம்நாட்டில் கிளை ஆரம்பிக்க சட்ட வழிமுறைகளை கொண்டுவர உள்ளது. வெளிநாட்டிற்கு படிக்க செல்பவர்கள், எம்.எஸ்., பட்டத்துடன், அங்கு பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதால் செல்கின்றனர். இங்கு கிளைகளை ஆரம்பித்தால், பட்டத்துடன் வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு உருவாக்கப்படுமா என பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.