அஸ்ஸலாமு அலைக்கும். நமதூரில் எண்பதுகளில் துவக்கப்பட்ட 'தாருத் தவ்ஹீத்' அமைப்பு, தமிழகத்தில் பிரிவு பட்டுப் பிளவு பட்டு நிற்கும் எந்தத் தவ்ஹீது அமைப்பிலும் சேராமல் தனித்தியங்கி வருவதை நீங்களெல்லாம் அறிவீர்கள். பெரும்பாலான அதிரை மக்கள் இந்நிறுவனத்தைக் கொண்டு பயன்பெற முடியாத அளவுக்கு, இதன் அலுவலகம் கடைத்தெருவின் ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்துவந்தது. அண்மையில் கூடிய இதன் நிர்வாகக் கூட்டத்தில், தாருத் தவ்ஹீதின் நூலகத்தையும் அலுவலகத்தையும் அருகிலுள்ள தரைத்தலம் ஒன்றுக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடைத்தெருவிலுள்ள வேறொரு இடத்திற்கு மாற்றும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இதன் மாதாந்திர நிர்வாகச் செலவு பன்மடங்காகக் கூடிவிட்டது. முன்பு தாருத் தவ்ஹீதின் செயல்பாடுகள் வீரியத்துடனும் விழிப்புணர்வூட்டும் விதத்திலும் இருந்தது போல், எதிர் காலத்திலும் இருக்கவேண்டும் என்று விழைகின்றோம். அதில் உங்கள் அனைவரின் பங்களிப்பும் மிகத் தேவை என்பதை அன்புடன் தெரிவித்து, இந்த நல்லறத்தில் உங்கள் நிரந்தரப் பங்களிப்பைக் கோருகின்றோம்.
நீங்கள் தரும் ஆர்வமும் ஆதரவும் எம்மைத் தவ்ஹீத் பணிகளில் முடுக்கி விடும் என்பதில் ஐயமில்லை. அன்புடன் தொடர்பு கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
அதிரை அஹ்மது
Cell: 00 91 9894989230
No comments:
Post a Comment