சுவைக்கு அடிமையனவர்களா?


நீங்கள் சுவைக்கு அடிமையனவர்களா? அதிகம் பாஸ்ட் ஃபுட் மற்றும் சில்லி சிக்கன் ஐயிட்டங்களை உள்ளே தள்ளுபவரா?  கொஞ்சம் இதப்படிங்க .

இன்று தெருவோரக் கடைகள் முதல் ஸ்டார் ஹோட்டல்கள்  வரை பாஸ்ட் ஃபுட் களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கலர் கலரான உணவு ரகங்களினால் கவரப்பட்ட நாம் சைவம்,அசைவம் என வித விதமாக ருசிக்க ஆரம்பித்து விட்டோம்.நாளடைவில் மயக்கும் பாஸ்ட் ஃபுட்களின் சுவைக்கு அடிமையாகி தினசரி அதனை சுவைக்க எத்தனிக்கின்றோம். ஆனால் அந்த உணவு பதார்த்தங்களில் ஒழிந்திருக்கும் அபாயம் தெரியாமலேயே நாமும் நாடிச் செல்வதோடு குழந்தைகளுக்கும் வாங்கித் தருகிறோம்.

 
பெரும்பாலும் பாஸ்ட் ஃபுட் ரகங்களில் இயற்கை உணவுப் பொருட்களுடன்  இரசாயண பொருட்களே கலக்கப்பட்டு சுவை கூட்டப்படுவதுடன் அழகுபடுத்தப்படுகின்றன.

நாம் விரும்பி உண்ணும் பிரைடு ரைஸ் முதல் சில்லிசிக்கன்,பெப்பர் சிக்கன்,ஜிஞ்சர் சிக்கன் என அனைத்து உணவு வகைகளிலும் சுவை கூட்டுவதற்காக அஜினோமோட்டோ,எசன்ஸ்,செயற்கை வர்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. மேற்கூறிய இவை அனைத்தும் முழுக்க முழுக்க கெமிக்கல்களே. வியாபாரிகளும் தங்களது வியாபாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளை விட அதிக அளவான அஜினோமோட்டோ,எசன்ஸ்,வர்ணங்கள் ஆகியவற்றை கலக்கின்றனர். இதில் அஜினோமோட்டோ போன்ற ரசாயண பொருட்களை 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என அகில இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில ஹோட்டல்களில் சிக்கன் 65 போன்ற உணவு பதார்த்தங்களில் நிறம் கூட்டுவதற்காக சூடன்டைன்,மெட்டானில் போன்ற கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. இவை துணிகளுக்கு சாயமிட பயன்படும் ரசாயணங்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.

இது போன்ற உணவுகளை தொடர்ந்து உண்பதால் குடல் கேன்ஸர்,சிறுநீரகக் கோளாறு,மரபணு கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் சாலை ஓரக் கடைகளில் சில்லி சிக்கன் தயாரிப்பவர்கள் எண்ணையை திரும்ப திரும்ப உபயோகிப்பதால். சில்லி சிக்கன் உண்பவர்களுக்கு கேன்ஸர் வரும் வாய்புகள் 100 சதவிதம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 comment: