வேட்பாளர்கள் குற்றப் பின்னணி


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி,சொத்து விவரம் உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் பொது மக்கள் பெற தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன்தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள்சொத்து விவரம் ஆகியவற்றைத் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில்தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ஜனநாயக மாற்றங்களுக்கான சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
இதன்படி, 2006 -ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 77 பேர் மீது மொத்தம் 176 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இதில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் விவரம்: திமுக: 39, பாமக: 15, காங்கிரஸ்: 9, அதிமுக: 8,மதிமுக: 2, இந்திய கம்யூனிஸ்ட்: 2.

2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 57 பேர் கோடீஸ்வரர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான மார்ச் 30-ம் தேதியில் இருந்தே வாக்காளர்கள்தங்கள் பகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்களது செல்போனில் இருந்து தங்கள் பகுதி அஞ்சல் பின் கோடு எண் 
(உதாரணமாக தியாகராய நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களாக இருந்தால் 600017) எனக் குறிப்பிட்டு 56070 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அனுப்பினால்அந்தத் தொகுதி வேட்பாளர்களின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் விவரம்அவர்களின் கல்வித் தகுதிசொத்து விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவரவர் செல்போன்களுக்கே அனுப்பப்படும் என ""ஜனநாயக மாற்றங்களுக்கான சங்க'' நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஐஐடிஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள்சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment