கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள்-குவைத்


குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும்பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் மக்களுக்கு ஏற்பாடு செய்யும்  புனித ரமழான் (1432 / 2011) மாத கடைசிப் பத்து நாட்களுக்கானகியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...

நாள்: 

20.08.2011 வெள்ளிக்கிழமை நள்ளிரவு / சனிக்கிழமை அதிகாலை (ரழமான் பிறை 20) முதல் 30.08.2011 (ரமழான் மாத கடைசி) வரை...

நேரம்:

தினந்தோறும் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை...

இடம்:

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், 
K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், 
ஃகைத்தான், குவைத்.

நிகழ இருப்பவை:
  • கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
  • குர்ஆன் ஹல்கா
  • திக்ரு மஜ்லிஸ்
  • துஆ மன்றம்
  • திருக்குர்ஆனை முறையாக ஓத தஜ்வீத் பயிற்சி
  • பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பாழிவுகள்
குறிப்பு: 
  • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்டும்.
  • பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
  • முன்பதிவு செய்தவர்களுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படும்
  • ஸஹர் உணவு தேவையுடையோர் தினந்தோறும் மாலை 5:00 மணிக்கு முன்பு (+965) 99694208 என்ற அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
பகல் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பிருப்போம்!
இரவு முழுவதும் இறைவனை வணங்கிக் கொண்டிருப்போம்!!

லைலத்துல் கத்ரை தேடி அல்லாஹ்விடம் தவமிருப்போம்!
இறுதிப் பத்தில் இறையருளை இணைந்தே இறைஞ்சுவோம்!!

மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:

துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்:  www.k-tic.com

No comments:

Post a Comment