மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா?
தமிழகத்திலிருந்து ஹஜ் செல்வோர் வசதிக்காக மதுரையிலிருந்து விமானங்கள் இயக்க அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு. அ. முஹம்மத் ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் பதில்:
மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்ட கேள்விக்கு விடை, அதாவது ஹஜ் பயணிகளுக்காக மதுரையிலிருந்து விமானம் இயக்கப்பட வேண்டுமென்றால், மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக செயல்பட வேண்டும். புறப்பாட்டுத் தளத்தில் சுங்கப் பரிசோதனை, குடியேற்றம் முதலான வசதிகள் இருக்கவேண்டும். ஆனால், மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக இயங்கவில்லை. மேலும், சர்வதேச பயணத்தினைக் கையாளுவதற்கான வசதிகளும் மதுரை விமான நிலையத்தில் தற்போது இல்லை.
ஆகவே, மதுரை, தென் பகுதியிலுள்ள 9 மாவட்டங்களைச் சேர்ந்த 813 ஹஜ் பயணிகள் வருகிறார்கள். இதற்காக மதுரையில் தனியாக விமானம் இயக்குவது சாத்தியமானதாக இல்லை. ஆனாலும், இதுதொடர்பாக மைய அரசுதான் முடிவு செய்யவேண்டும்.
அதுதவிர, புனிதப் பயணம் புறப்படுமுன், தங்குவதற்காக சென்னையில் "ஹஜ் ஹவுஸ்' எனப்படும் இல்லத்தில் போதிய தங்குமிட வசதி உள்ளது. அத்தகைய வசதி ஏதும் மதுரையில் இல்லை. இதனால் தனியாக விமானம் இயக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பல்வேறு மாநிலங்களிலே இரண்டு, மூன்று முனையங்களி-ருந்து ஹஜ் பயணிகள் செல்கிறார்கள். நம்முடைய பக்கத்து மாநிலமான கேரளா, நம்மைவிட நிலப்பரப்பிலே குறைவான மாநிலமாக இருந்தபோதிலும், கொச்சியி-ருந்தும், கோழிக்கோட்டி-ருந்தும் விமானங்கள் ஜெட்டாவிற்கு ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், சென்னையி-ருந்து செல்லக்கூடிய ஹஜ் பயணிகளில் பாதிப்பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வே-, தூத்துக்குடி, கன்னியாகுமரி இதுபோன்ற மாவட்டங்களி-ருந்துதான் தமிழ்நாட்டி-ருந்து சென்னைக்கு வந்து செல்லவேண்டிய ஒரு நிலை. அவர்கள் சென்னைக்கு வந்து செல்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் பிடிக்கக்கூடிய நிலையிலே, மதுரையிலே இந்த வசதி செய்யப்பட்டால் அவர்கள் சில மணி நேரங்களிலேயே மதுரைக்கு வந்து அந்த முடித்துவிட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து கொடுப்பதற்காக வேண்டி பத்திரிக்கை செய்திகளின்படி எல்லாம் முடிந்துவிட்டது. இந்த ஆட்சியிலே நடைபெறக்கூடிய, இந்த மக்கள் நல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, தமிழக அரசு முன்னிலை எடுத்து மதுரையி-ருந்தும் ஹஜ் விமானம் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்தால் அது மிகப்பெரிய ஒரு வரலாற்று சாதனையாக, சிறுபான்மை மக்களுக்கு நீண்டகாலமாக செய்யக்கூடிய ஒரு பெரும் சேவையாக அமையும். தமிழக அரசு அதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.
மாண்புமிகு திரு. அ. முஹம்மத் ஜான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மொத்த பயணிகள் 3,048. அதில் மதுரை போன்ற 9 தென் மாவட்டங்களிலிருந்து செல்கின்ற பயணிகளின் எண்ணிக்கை 813 தான். ஒரு விமானத்திற்கு 450 பேர் வீதம் சென்றாலும் இரண்டு விமானம் மூலம்தான் செயல்பட முடியும். அதுமட்டுமல்லாமல், மாண்புமிகு உறுப்பினர் சொன்னது போன்று அண்டை மாநிலங்களான கேரளாவிற்கு மைய அரசின் ஒதுக்கீட்டின்படி ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 6,900 ஆகும். ஆனால், அங்கு கோழிக்கோடு, கொச்சி ஆகிய மூன்று இடங்களில் சர்வதேச விமானங்கள் செயல்பட்டாலும் ஹஜ் விமானங்கள் கோழிக்கோடு சர்வதேச விமானத்தி-ருந்து மட்டும்தான் இயக்கப்படுகின்றது. கோழிக்கோடு தவிர சர்வதேச விமானங்களில் ஹஜ் பயணிகளை ஏற்றிச்செல்ல 5 சதவீதம் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. கர்நாடகா மாநிலத்திலும் ஹஜ் பயணிகளின் ஒதுக்கீடு சுமார் 5,667 ஆக இருந்தாலும், ஹைதராபாத்தி-ருந்து மட்டுமே ஹஜ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, தமிழகத்தி-ருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளும் சென்னையிலேயே சிறப்பாக அளிக்கப்பட்டு வருவதால் மதுரையில் விமானங்களை இயக்குவது குறித்து தற்போது சாத்தியம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த முறை ஹஜ் பயணிகளுக்காக மேலும் இரண்டாயிரம் இடங்கள் அதிகமாக ஒதுக்கப்பட வேண்டுமென்று மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment