ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும்கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா?
எம். அபூபக்ர், திருமங்கலக்குடி
நான் ஸஹர் நேரத்தில் மஸ்ஜிதில் குப்புறப்படுத்துக் கிடக்கும் போது, ஒருவர் காலால் என்னைஅசைத்து, இது அல்லாஹ்வை கோபம் கொள்ளச் செய்யும் படுக்கையாகும்” என்று கூறினார். நான்(விழித்துப்) பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: யயீஸ் பின் தஹ்ஃபா பின் கைஸ் அல்கிஃபாரி (ரலி)
நூல் : அபூதாவூத் (5040)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குப்புறப் படுப்பதற்குத் தடை உள்ளது. ஆனால் பெண்கள் நிமிர்ந்துபடுப்பதற்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக நபி (ஸல்) அவர்கள்வலதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்துகொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், யா அல்லாஹ்! நான்எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவுவைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச்செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீஇறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்’ என்றபிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப்பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல் : புகாரி (247)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழி என்பதை அறியலாம்.இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகும்.
மருத்துவ சோதனை, மருத்துவரின் ஆலோசனை போன்ற காரணங்கள் இருந்தால் அல்லதுகுப்புறப்ப்டுக்கும் தேவை இருந்தால் அது இவர்களைக் கட்டுப்படுத்தாது.
மேலும் ஒருக்களித்து படுத்த பின் தூக்கத்தில் ஒருவர் இயல்பாக குப்புறப்படுத்தால் அதையும்கட்டுப்படுத்தாது.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று,
சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது. தூங்குவதனால் உடம்பில்ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். தூங்குவதற்கும் சில விதி முறைகள்இருக்கிறது.அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லவேண்டும். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். எப்போதும்,(சுபுஹு தொழுகையை தினமும் ஜாமாத்துடன் தொழ தவறிவிடாதீர்கள்) இரவில் மட்டுமே தூங்கவேண்டும்.
கவிழ்ந்து படுக்க கூடாது : கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால்,சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது.குப்புறப்படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.
|
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். திருக்குர்ஆன் 4:48
குப்புறப் படுத்து தூங்கலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment