அதிபர் மனைவி

கெய்ரோ: நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டில், ஹோஸ்னி முபாரக் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டதில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமதுமூர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.முன்னாள் அதிபர் முபாரக்கின் மனைவி சுசானே, நவீன பாணியில் தான் உடை அணிவார். ஆனால், தற்போதைய அதிபர் மூர்சியின் மனைவி நக்லா, வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து தான் செல்கிறார்.சமீபத்தில், இவர் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில்,"அதிபரின் மனைவியை "நாட்டின் முதல் பெண்மணி' என அழைப்பதில், எந்த நியாயமும் இல்லை. அதிபர் மனைவி என அழைக்கலாம் அல்லது நாட்டின் முதல் பணிப்பெண் என அழைக்கலாம். மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றால் "அம்மா' என்றழைக்கலாம். எனவே, என்னை நாட்டின் முதல் பெண் என்றழைக்க வேண்டாம்' என்றார்.

1 comment:

  1. நல்ல முன் மாதிரியான எகிப்த் தாய்

    ReplyDelete