ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா அல்லது கட்சிகள் யாரும் போட்டிக்கு வந்து அதனால் ஓட்டுக்கள் பிரியுமா என்ற ஒரு சந்தேகத்தோடு பல வார்டுகளின் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஒரு அலசல் செய்ததில் கிடைத்த ரிசல்ட் இதோ:
1)ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கடிதம் கிடைத்தவுடன் எல்லா கட்சிகளும் ஆடிபோய் இருக்கின்றன.

1)ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கடிதம் கிடைத்தவுடன் எல்லா கட்சிகளும் ஆடிபோய் இருக்கின்றன.
2)சங்கம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக களத்தில் நின்றால்,அந்த வார்டுகளில் உள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கட்டளைதான் முக்கியம் என கருதும் ஏகோபித்த மக்கள் காறித்துப்புவார்கள் என அஞ்சுகிறார்கள்.
3)வயதான,நடுத்தர,இளைய ஆண்களும்,பெண்களும் ஒட்டு மொத்தமாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன சொல்கிறதோ,அதைத்தான் கேட்போம் என்றும் இது முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு முதல் படி என்றும் இதுவே ஊர் அளவிலும்,ஏன் உலக அளவிலும் பிரதி பலிக்கும்(கிலாபத்)எனவும் பேசுவதை கேட்க முடிகிறது.இது மூலம் சமுதாய மக்களின் எண்ணம் ஒன்றாக உள்ளதை அறிய முடிகிறது.
4)சங்கத்தை மீறி கட்சிகள் சார்பில் வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தினால் - அந்த கட்சி பேரூராட்சி தலைவருக்கு நிறுத்தி இருக்கும் வேட்பாளரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தோற்கடிக்கும்,காரணம் முஸ்லிம்கள் ஜமாஅத் சொல்லைத்தான் கேட்பார்கள் என பயந்து போய் உள்ளனர்.
5)பேரூராட்சி தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை-ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இன்னாருக்குத்தான் ஆதரவு என தெரிவிக்காததால் மக்களும் குழம்பி போய் உள்ளனர்.
இனி அடுத்த ரவுண்டில் சந்திக்கலாம் - இன்ஷா அல்லாஹ்