ஷம்சுல் இஸ்லாம் சங்க கடிதம் படுத்திய பாடு,அரசியல் கட்சிகளுக்கு ஜுரம்,சூடான முதல் சர்வே!

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆறு வார்டுகளில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா அல்லது கட்சிகள் யாரும் போட்டிக்கு வந்து அதனால் ஓட்டுக்கள் பிரியுமா என்ற ஒரு சந்தேகத்தோடு பல வார்டுகளின் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஒரு அலசல் செய்ததில் கிடைத்த ரிசல்ட் இதோ:


1)ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கடிதம் கிடைத்தவுடன் எல்லா கட்சிகளும் ஆடிபோய் இருக்கின்றன.

2)சங்கம் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக களத்தில் நின்றால்,அந்த வார்டுகளில் உள்ள ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கட்டளைதான் முக்கியம் என கருதும் ஏகோபித்த மக்கள் காறித்துப்புவார்கள் என அஞ்சுகிறார்கள்.

3)வயதான,நடுத்தர,இளைய  ஆண்களும்,பெண்களும் ஒட்டு மொத்தமாக ஷம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன சொல்கிறதோ,அதைத்தான் கேட்போம் என்றும் இது முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு முதல் படி என்றும் இதுவே ஊர் அளவிலும்,ஏன் உலக அளவிலும் பிரதி பலிக்கும்(கிலாபத்)எனவும் பேசுவதை கேட்க முடிகிறது.இது மூலம் சமுதாய மக்களின் எண்ணம் ஒன்றாக உள்ளதை அறிய முடிகிறது.

4)சங்கத்தை மீறி கட்சிகள் சார்பில் வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தினால் - அந்த கட்சி பேரூராட்சி தலைவருக்கு நிறுத்தி இருக்கும் வேட்பாளரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தோற்கடிக்கும்,காரணம் முஸ்லிம்கள் ஜமாஅத் சொல்லைத்தான் கேட்பார்கள் என பயந்து போய் உள்ளனர்.

5)பேரூராட்சி தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை-ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இன்னாருக்குத்தான் ஆதரவு என தெரிவிக்காததால் மக்களும் குழம்பி போய் உள்ளனர்.

இனி அடுத்த ரவுண்டில் சந்திக்கலாம் - இன்ஷா அல்லாஹ் 




6 comments:

  1. appa pottiyila dmk members athihama irukkangale ippa sangam yenna action yedukka poraanga

    ReplyDelete
  2. கே கே ஹாஜா அவர்களுக்கும் மேலேத்தெரு வாடி (எம் எம் எஸ்) வகையரக்களுக்கும் இரகசிய உடன்படிக்கை

    மேலேத்தெரு எம் எம் எஸ் வாடி குடும்பத்தினர் கேட்டுகொண்டதினர்கிணங்க அரசியலில் நூறு வருட பெருமைக்குரிய முஸ்லிம் லீக்கின் அதிரை முக்கிய பொறுப்பாளர் கே கே ஹாஜா அவர்கள் தனக்கு கிடைத்த அதிரை பேருர் ஆட்சி தலைவர் போட்டிக்கான வாய்பை, முன்பு சூல் நிலைக்கு ஏற்ப பல கட்சிகளில் அங்கம் வகித்த தற்பொழுது தன்னை முஸ்லிம் லீக்கில் இணைத்துள்ள அதிரை வழக்கறிஞர் (அப்பாவி ) அப்துல் முனாப் அவர்களுக்கு தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை வழங்கியதன் மூலம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதினால் இதனை தடுக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கோடு இதை கவனத்தில் கொண்டு எம் எம் எஸ் குடும்பத்தினர், அவர்கலுக்கு நெருங்கிய உறவான கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி நீங்கலும் நம் முஹல்லாவில் நின்றால் நாம் இருவரும் தேர்தலில் தோர்த்து விடுவோம் அந்த வாய்ப்பை நடுத்தெரு சம்சுல் இஸ்லாம் பகுதி உள்ளவர் களுக்கு வழங்கிவிட்டால் நாம் (எம் எம் எஸ் குடும்பத்தினர்) வெற்றிபெற்று விடலாம் நான் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெற்றதுவாக இருக்கும் என்று கூறி கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி உள்ளதாக நம்பதகுங்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதனால் வழக்கறிஞர் முனாப் அவர்கள் (கே கே ஹாஜா அவர்களை) நம்பி மோசம் போய் விட்டார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

    மேலத்தெரு வாசி நம்மிடையே கூறும் பொழுது
    ஒவ்வொரு சட்ட மன்ற பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் எம் எம் எஸ் வாடிக்கு தேவையானதை அல்லது எதிர் பார்த்ததை கவனமா அவர்கள் வாங்கி கொள்கின்றனர். ஆனால் அதற்காக ஓட்டுப் போட்ட மக்களோ கொசுக்கடியையும், சாக்கடை நாற்றத்தையும் நோய் நொடியையும் தனதாக்கிக் கொள்கின்றனர் என்று தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப் பட்டா ஓர் வாசகர் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.

    ReplyDelete
  3. இதையும் படியுங்கள்

    http://penaamunai.blogspot.com/2011/09/blog-post_30.html

    ReplyDelete
  4. Kozhi Kader from DMK who is against to Sangam authorised Apple Ibrahim will LOOSE DEPOSIT

    ReplyDelete
  5. shamsul islam sangam is very good he take the action very very good mashaa allah very good aiadmk cpi mdmk

    ReplyDelete
  6. ms shahabudeen kaka sangathu members nominationkku munnadi sangathil pesiyathai vedio vil paarkka nerthathu avarhal pesiyathu sangam niruthiya candidatekku yethiraaha katchi saarbaaha yentha katchiyavathu vetpaalarhalai niruthinaal antha katchiyin thalaivar vetpalurukku chairman vetpalurukku yethiraaha sangam velai seiyum appa syed khader hajar ammal yellaam sangam niruthiya vetpalarhala avarhal yentha katchi neengal katchihalukku anuppiya kaditham dmk ku porunthatho athaiyum kadithathil kurippittu irukalame sangam action yeduthathurkku romba nandry very very good masha allah shahabudeen kakakku oru oo poduvamahaa oo!!! ooo!!!! OO!!!!!

    ReplyDelete